தீவிரவாதி என நினைத்து இரண்டு கைகளில்லாத அப்பாவியை சுட்டு கொன்ற அமெரிக்க போலீஸ் அதிகாரி.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1412300821utah police 1

அமெரிக்காவில் Utah என்ற மாகாணத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிறைந்துள்ளது.

அமெரிக்காவின் Utah மாகாணத்தை சேர்ந்த Salt Lake City என்ற நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி Bron Cruz என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது மூன்று தீவிரவாதிகள் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தார். அவர் உடனடியாக தன்னுடைய காரில் இருந்து இறங்கி மூவரையும் நோக்கி தன்னுடைய துப்பாக்கியை காண்பித்து உடனடியாக மூவரும் கைகளை மேலே தூக்கும்படி எச்சரித்தார்.

போலீஸ் அதிகாரி Bron Cruz அவர்கள் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு இருவர் உடனே கைகளை மேலே தூக்கினர். ஆனால் ஒருவர் மட்டும் கைகளை தூக்கவில்லை. அவர் தனது கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்ததாக நினைத்த காவல்துறை அதிகாரி உடனே அவரை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அருகே சென்று பார்த்தபோதுதான் அவர் இரண்டு கைகளும் இல்லாதவர் என்று தெரியவந்தது.

தீவிரவாதி என நினைத்து ஒரு அப்பாவி இளைஞரை சுட்டு கொலை செய்ததாக Bron Cruz அவர்கள் உடனே கைது செய்யப்பட்டார். எனினும் அவர் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்பதால் அவருக்கு சிறிய அளவு தண்டனையோ அல்லது மன்னிப்போ கிடைக்கும் என காவல்துறை எதிர்பார்க்கின்றது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit