நீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய 770 மில்லியனில் 470 மில்லியன் ஊழல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நீரிழிவு நோயாளர்களின் இரத்த சுத்தப்படுத்தல் வேலைக்கான உபகரண கொள்வனவுக்கென ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 770 மில்லியன் ரூபாவில் 470 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் ஆராயுமாறு கோரி வசந்த பண்டார உள்ளிட்ட குழுவினர் நேற்று (01) லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்ட நோயாளர்களின் இரத்தம் சுத்தம் செய்யவென டயலெசின் இயந்திரம் கொள்வனவு செய்ய ஜப்பான் அரசாங்கம் 770 மில்லியன் ரூபாவை வழங்கியது.

அந்த பணத்தை பயன்படுத்தி தரமற்ற 53 டயலெசின் இயந்திரங்களும் 06 ஸ்கேன் இயந்திரங்களும் 300 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்வனவின் பின்னணியில் 470 மில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது.

இந்த ஊழல் மோசடி குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*