உலகின் மிக காஸ்ட்லியான நகரம் லண்டன். தனியார் நிறுவனத்தின் சர்வே முடிவு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

83d7325ea34d263333042b00311e7e9c

உலகின் மிகப்புகழ் வாய்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Savills, சமீபத்தில் உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரம் எது என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்தது. இந்த கருத்துக்கணிப்பில் சென்ற ஆண்டு முதலிடத்தில் இருந்த ஹாங்காங் நகரம் பின்னுக்கு தள்ளப்பட்டு அந்த இடத்தை லண்டன் கைப்பற்றியுள்ளதாக தனது அறிக்கை முடிவில் தெரிவித்துள்ளது.

Savills நிறுவனத்தின் இயக்குனர் நேற்று உலகின் மிக காஸ்ட்லியான நகரம் என்ற சர்வே முடிவை அறிவித்தார். இதில் முதலிடத்தை பிடித்துள்ள லண்டன் மாநகரகத்தில் ஒருவர் வாழவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் ஆகும் செலவை விட இருமடங்கு ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த லண்டன், இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளதாக இந்த சர்வே முடிவு கூறுகிறது.

ஒரு நகரத்தில் உள்ள விலைவாசி, ரியல் எஸ்டேட் நிலவரம், மக்களின் அன்றாட தேவைகள் கிடைக்கும் தன்மை மற்றும் அந்த நாட்டின் கரன்சியின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த சர்வே தயாரிக்கப்பட்டதாக Savills நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சர்வேயில் இந்தியாவின் மும்பை 12வது இடத்தை பிடித்துள்ளது. உலகின் மிக காஸ்ட்லியான 12 நகரங்களின் பட்டியல் இதோ:

1. London
2. Hong Kong
3. New York
4. Paris
5. Tokyo
6. Singapore
7. Moscow
8. Sydney
9. Dubai
10. Shanghai
11. Rio de Janeiro
12. Mumbai
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit