ஐ.எஸ்.ஐ.எஸ்.களுக்கு உணவு விநியோகித்த ஈராக் விமானபடை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

isis_increases_005

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாட்டு அரச படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈராக்கிய படைகளுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வான் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சக்லாவ்யா என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈராக் ராணுவம் போரிட்டு வருகின்றன.

இவர்களுக்கு உணவு, தண்ணீர், தளவாடங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தேவை ஏற்பட்டதை முன்னிட்டு ஆகாய மார்க்கமாக போர் நடக்கும் பகுதிகளில் இவற்றை வீச அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த சில விமானிகளின் தலைமையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இவர்கள் தவறுதலாக தீவிரவாதிகள் நிறைந்த பகுதியில் இந்தப் பொருட்களை வீசியுள்ளதாக பின்னர் தெரிய வந்தது என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், பிரிகேடியர் ஒருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானிகள் அனைவரும் புதிதாக பயிற்சிக்கு வந்துள்ள இளைஞர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் டிபென்ஸ் கமிட்டியில் பணிபுரியும் பாராளுமன்ற உறுப்பினரான ஹக்கீம் அல் சமிலி இதனை உறுதி செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit