ஜனாதிபதி இன்று வத்திக்கானுக்கு விஜயம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் விசேட விமான மூலம் வத்திகானுக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.

 

 

ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது பாப்பரசருடனான விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இன்று வத்திக்கானுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி பாப்பரசரை சந்திப்பதோடு ரோம் நகரில் வாழும் மற்றும் தொழில்புரியும் இலங்கையர்களுடனும் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி நாடு திரும்புவார் என்றும் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.

 

இதேவேளை, ஜனாதிபதியின் வத்திகான் விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல;

 

ஜனாதிபதி வத்திக்கானுக்கு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதற்கான அழைப்பிதழை பாப்பரசருக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பார் என்று தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit