பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது: டக்ளஸ்

பிறப்பு : - இறப்பு :

பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு ஒரே இரவில் தீர்வுகளை காணமுடியாது. ஆனாலும் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (01) தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

வடபிராந்தியத்திலுள்ள ஏழுசாலைகளிலும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் பிரச்சினைகள் இருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதும் அத்தியாவசியமாக உள்ளது.
சாலைகளின் மேம்பாட்டுக்காக மட்டுமன்றி அதுசார்ந்து வாழ்வோரின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அனைவரும் விசுவாசமாகவும் பொறுமையாகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஏழு சாலைகளினதும் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்து கொண்ட அதேவேளை, அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit