தமிழ் படத்தில் நோ கிளாமர்… தெலுங்கில் லிப் லாக் சீன் ஓகே. இது ரெஜினா பாலிசி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் படத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்த ரெஜினா, தெலுங்கு படங்களில் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். பவர், ரா ரா கிருஷ்ணய்யா படங்களில் ரெஜினா நடித்த முத்தக்காட்சிகள்தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரசன்னா, லைலா நடித்த ‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவின் தங்கையாக ஒரு சுட்டித்தனமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரெஜினா. அதன் பின் ‘அழகிய அசுரா’ என்ற சிறிய பட்ஜெட் படத்தில் நாயகியாக நடித்தார்.

“சிவா மனசுல சக்தி படத்தின், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து, ஒரே படத்தில் பிரபலமாகி விட்டார். அத்துடன், அடுத்தடுத்து, அங்கு ஹிட் படங்களாக அமைந்ததால், தமிழகத்தையே மறந்துவிட்டார் ரெஜினா.

ஏழு வருடங்கள் கழித்து டைரக்டர் பாண்டிராஜ் தன்னுடைய கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க வைத்தார்.

தமிழில் அடுத்து வந்த ‘நிர்ணயம்’ படம் அவருடைய நிலையை கொஞ்சம் இறக்கிவிட்டது. கிளாமர் கதைகளே பிடிக்காத ரெஜினாவை, தொடர்ந்து தேடி வந்ததெல்லாம், கிளாமர் கதைகள் தானாம். அதனால் தான், “நல்ல படம் கிடைக்கும் போது தமிழுக்கு வருகிறேன் என்று கூறி, மீண்டும் ஆந்திராவில் முகாம் போட்டார்.

அங்கு ரவி தேஜா உடன் பவர் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பவர் படத்தில் ஹன்சிகாதான் முக்கியமான கதாநாயகி என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நாயகியாக ரெஜினா நடித்திருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை ‘நச்’ என உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர். அந்த ‘நச்’சில் முத்தக் காட்சியும் அடக்கம் என்பதுதான் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ரவி தேஜா நடிக்கும் படங்களில் கிளாமரான ஹீரோயின்கள் வருவார்களே தவிர, முத்தக் காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளே இருக்கவே இருக்காது. அவருக்கு பெண் ரசிகைகளும், குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களும் அதிகம். ஆனால், ‘பவர்’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவீந்திரா கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவிதேஜா அந்த முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம்.

படத்தில் உள்ள அந்தக் காட்சியைப் பற்றி இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கத்தான் அதை சொல்லாமல் விட்டார்களாம்.

ஒரு பாடல் காட்சியில்தான் அந்த முத்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறதாம். எந்த உறுத்தலும் இல்லாமல் மென்மையான விதத்தில்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டதாம்.

ஏற்கனவே ரா ரா கிருஷ்ணய்யா படத்தில் சுதீப் கிருஷ்னையாவுக்கு ஜோடியாக ரெஜினா லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்போது பவர் படத்திலும் அதேபோல லிப் லாக் சீனில் நடித்துள்ளார். இந்தப் படம் தன்னை முன்னணி ஹீரோயினாக உயர்த்திவிடும் என நம்புகிறாராம் ரெஜினா.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*