வடக்கில் கார்த்திகை மாதம் மட்டும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படும்; ஐங்கரநேசன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு மாகாணத்தின் மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் ஒரு இலட்சம் மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மழை பொய்த்துப் போனதால் தற்போது வடக்கு மாகாணத்தில் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து வடக்கு மாகாணத்தில் மரங்களை நாட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மழை கிடைக்கும் ஆரம்பமாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டது.

அனையடுத்து வடக்கு மாகாண சபையின் கடந்த மாதாந்த கூட்டத்தில் மரநடுகை மாதமாக கார்த்தினை மாதத்தினை தெரிவு செய்வதற்கு வடக்கு மாகாண சபை அனுமதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஐங்கரநேசன் சபையில் கோரிக்கையினை முன்வைத்தார்.

அதற்கமைய முதலமைச்சரால் சபையில் கோரிக்கை ஏற்கப்பட்டு பிரேரணையாக நிறைவேற்றப்பட்டது. கார்த்திகை 1முதல் 30 வரை மரநடுகை மாதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் கார்த்திகை மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகவே வடக்கில் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மாதத்தில் வடக்கில் ஒரு இலட்சம் மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வடக்கில் உள்ள பயன்தரு மரங்கள் மற்றும் அலங்கார மரங்களை உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்களை அழைத்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் தாவர உற்பத்தியாளர் சங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

அத்துடன் தாவர உற்பத்தியாளர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றைத்தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுப்படுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான மரக்கன்றுகளை இங்குள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*