‘அகடு’ படுதோல்வி. விநியோகிஸ்தர் தற்கொலை முயற்சி. ரஜினி மகள் அதிர்ச்சி.

பிறப்பு : - இறப்பு :

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடித்த ‘அகடு’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்த ஒருவர் மனம் நொந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ்பாபு, தமன்னா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘அகடு’ திரைப்படத்தின் வசூல் ஊடகங்களில் வருவதுபோல உண்மையான வசூல் இல்லை என்றும், தயாரிப்பாளரால் காட்டப்பட்ட பொய்யான கணக்கு என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் மூன்றே நாட்கள் மட்டுமே படத்திற்கு கூட்டம் இருந்ததாகவும், அதன்பின்னர் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் ரிசல்ட் காரணமாக வசூல் பாதிப்படைந்தது என்றும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள நெல்லூர் பகுதி விநியோகிஸ்தர் ஒருவர் வட்டிக்கு பணம் வாங்கி அகடு திரைப்படத்தை ரிலீஸ் செய்ததாகவும், ஆனால் அவர் போட்ட பணத்தில் பாதிகூட வசூலாகாததால் கடும் அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் அறிந்து செளந்தர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் தான் அகடு படத்தின் நான்கு மாநில உரிமைகளை ஈராஸ் நிறுவனத்திற்காக பெற்றுத்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகேஷ்பாபு தனது அடுத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit