2000 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் கிடையாது. ஆஸ்திரேலிய அரசு அதிரடி.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

3346b640593230b81af0529f677c965c

ஆஸ்திரேலிய அரசு தங்கள் நாட்டில் படிப்படியாக பொதுமக்களிடம் உள்ள சிகரெட் பழக்கத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரு புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்பதுதான் அந்த அதிரடி சட்டம். இந்த சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிகரெட் விற்பனையாளர்களுக்கு அரசு எச்சரித்துள்ளது.

இந்த தடை சட்டம் வரும் 2018ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது 14 வயதில் இருப்பவர்கள் அனைவரும் 18 வயதை பூர்த்தி செய்தபின்னர் தான் சிகரெட்டை அவர்கள் கையால் தொடமுடியும். முதல்கட்டமாக இந்த சட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள Tasmania மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை சட்டத்தால் ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே சிகரெட் பழக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என அரசு நம்புகிறது. கூடிய விரைவில் புகையில்லா ஆஸ்திரேலியாவை உருவாக்குவதே தங்கள் கனவு என ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit