குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தந்தையின் மார்பில் கைகோர்க்கும் காட்சி: படுவைரல் வீடியோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

b52247ff-bb06-47d7-ac84-40531989f700_S_secvpf

இங்கிலாந்து நாட்டின் எட்டின்பர்க் அருகேயுள்ள டுடிங்ஸ்ட்டன் பகுதியை சேர்ந்த கிரைக்-லாரா தம்பதியர் தங்களது முதல்வாரிசின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். லாராவின் வயிற்றில் இரட்டைக்கரு வளர்வதை அறிந்த தந்தை கிரைக்கின் ஆவல் இரட்டிப்பாக ஆனநிலையில் துரதிர்ஷ்டவசமாக கருத்தரித்த 30 வாரங்களிலேயே லாராவுக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது.

சராசரி கர்ப்பக்காலத்துக்கு பத்து வாரங்கள் முன்னதாகவே சிசேரியன் முறையில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் வெறும் மூன்று பவுண்டு எடையே உள்ளதால் டாக்டர்கள் கவலையடைந்த நிலையில் தந்தை கிரைக்கின் மார்பில் இரு குழந்தைகளும் கிடத்தப்பட்டன.

அப்போது, ஒரு தபால் வில்லையின் (ஸ்டாம்ப்) அளவேயுள்ள தனது கையால் சகோதரனின் கையை இன்னொரு குழந்தை பிடித்த காட்சி தற்போது வைரல் வீடியோவாக வலம் வருகிறது.

கடந்த 13-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்து பரவசப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தும் மேற்பட்டவர்கள் மகிழ்வுடன் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit