வவுனியாவில் வயோதிகப் பெண் கிணற்றில் விழுந்து பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா பூவரசங்குளம் கந்தன் குளம் கிராமத்தில் இன்று மாலை (18-01) வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு சொந்தமான பொது கிணற்றில் வயோதிகப் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வள்ளிபுரம் தனலட்சுமி 60 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்
வவுனியா தெற்கு பிரதேச சபையால் கட்டி கொடுக்கப்பட்ட இக்கிணரானது சரியான முறையில் பாதுகாப்பானதாக அமைக்கப்படவில்லையென்றும் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளதால் இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இக்கிணரானது சரியாக புனரமைப்பு செய்யாவிடத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கிராம மக்கள் கருத்து வெளியிட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*