வவுனியா மரக்கறி நாள் சந்தையில் பொங்கல் நிகழ்வு

பிறப்பு : - இறப்பு :

வவுனியா கொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள மரக்கறி மொத்த விற்பனை நாள் சந்தையில் இன்று காலை 10.00 மணிக்கு உள்ளுர் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவசிறி நா.பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை நடத்தி சூரியனுக்கு நன்றி செலுத்தியதுடன் அனைவருக்கும் பொங்கல் ஆசிர்வாதங்களை வழங்கினார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா கலந்துகொண்டதுடன் வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா வர்த்தகசங்கத் தலைவர் எஸ்.ராசலிங்கம், வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit