சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா (PHOTOS & VIDEO)

பிறப்பு : - இறப்பு :

சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா மூத்த ஊடகவியலாளர்கள் கலந்துரையடளுடனும் , பல கலை நிகழ்வுகளுடனும் அரங்கேற்றப்பட்டது !இந் நிகழ்வானது ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம்  திகதி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவ் உதவி நிலையமானது ஈழத்தில் உள்ள சிறார்களின் கல்வியை மேலோங்க செய்வதற்காக கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு சிறந்த அமைப்பாக உள்ளது . இதன் சான்றாக இவ் அமைப்பின் தலைவரான விமலநாதன் அவர்கள் கதிரவன் உலாவில் பிரத்தியேக நேர்காணல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பெருந்திரளான மக்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களை கண்டுகளித்தனர், நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் கதிரவன் குழுவம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தலைவர் விமலநாதன் அவர்களின் சிறப்புரையுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது!

இந் நிகழ்வில் காணொளி மற்றும் படங்களை நீங்கள் கீழ் காணக்கூடியதாக இருக்கும் .

படங்கள் இணைப்பு

படங்கள் இங்கே கிளிக் செய்யுங்கள்

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit