வவுனியாவிலிருந்து போக்குவரத்து சேவையினை மாலை ஏழு மணிவரை நீடிக்கவும்-வவுனியா வர்த்தக சங்கம் கோரிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா மாவட்டத்திற்கான போக்கு வரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் தமது சேவையினை வவுனியாவிலிருந்து மாலை ஏழு மணிவரை நீடிக்குமாறு வவுனியா வர்த்தக சங்கம் கோரியுள்ளது.
பல கிராமங்களிலிருந்து பொருளாதார சூழ்நிலை காரனமாக பல இளைஞர்கள் யுவதிகள் வவுனியா நகரில் பல நிறுவங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது இ.போ.ச மற்றும் தனியார் பேரூந்துகள் மாலை 5.20 நிமிடங்களுடன் பல கிராமங்களுக்கான போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதால் வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்கள் பெரும் சிரமத்திற்கும் குறிப்பாக பெண்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே பொது மக்களின் நலன் கருதி குறிப்பாக செட்டிகுளம், கிளிநொச்சி, மன்னார், சிதம்பரபுரம், நாகர்இலுப்பைக்குளம், மகாறம்பைக்குளம், மரக்காரம்பளை போன்ற இடங்களுக்கான சேவையினை மாலை ஏழு மணிவரை நீடிப்பு செய்யுமாறும் வர்த்தக சங்கத்திற்கு இது விடயம் தொடர்பாக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொவித்தனர்.

அத்துடன் காலையிலும் கிராமங்களிலிருந்து புறப்படும் பேரூந்துகள் 7.30மணியளவில் வவுனியா நகரை வந்தடைய ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பாக அவர்கள் மாகாண முதலமைச்சர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர். தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிற்கும் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*