தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் ஓர் அங்கமாக இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கை மனுவிi நா. தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் முறையாக டிச 29 திங்கட்கிழமை கையளித்துள்ளனர்.
தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அனைத்துலகச் சட்டங்களை மீறும் செயலாகும் என தெரிவித்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அனைத்துலக சமூகம் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளார் :
தமிழ்க் கைதிகள் அனைவரும் அனைத்துலக சட்ட விதிகளின் படி பாதுக்காப்புக்கு உரியவர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித முடிவும் இன்றி இவர்களைத் சிறையில் வைத்திருப்பது ஜெனீவா சட்டவிதிகளையும்  வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களையும் மீறும் செயலாகும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும் போர்க்கைதிகள் எனப் பகிரங்கமாக அறிவித்தல் வேண்டும்.
அனைத்துலக சட்ட விதிகளுக்கமைய, இக்கைதிகளின் உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அனைத்துலக சட்டத்திற்குப் முரணாக இவர்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மீது நீதி விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
யுத்த காலத்தில் இணக்கப்பாட்டாளராக செயற்பட்ட நோர்வே அரசினையும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது இணைத் தலைமை வகித்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளையும், இவ்விவகாரத்திர் தலையிட்டு அனைத்துலக  சட்ட விதிகளின் கீழ் சிறிலங்கா அரசுக்கு உள்ள பொறுப்பினை வலியுறுத்த வேண்டும் என நாம்
வேண்டுகின்றோம்.
முக்கியமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மதிப்புமிகு அல் {ஹசைன் அவர்கள் தனது செல்வாக்கைப் பிரயோகித்து சட்டத்திற்கு முரணான  வகையில் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரி நிற்கின்றது.
இதேiவேளை கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுக்கபட்டு வரும் தபால் அட்டைப் பரப்புரையில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்கள் குறித்த https://secure.avaaz.org/en/petition/UN_High_Commissioner_for_Human_Rights_the_Honorable_Zeid_Raad_Al_Hussein_Sri_Lanka_Release_All_Tamil_POWs_immediately/?nfQCZjb இந்த இணைப்பின் வழியே பங்கெடுத்துக் கொள்ள முடியுமென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*