மனித உரிமைக் காவலனாகவும் தேசியப் பற்றாளனாகவும் வாழ்ந்தவர் ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சர்வதேச மேற்பார்வையில் தமிழர் தாயகத்தில் போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலகட்டத்தில் உலக அமைதிக்கான இறை தூதராக இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இறைநாள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் தேவாலையத்தில் வைத்து சிங்களக் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மனித உரிமைக் காவலனாகவும் தமிழீழ தேசியப் பற்றாளனாகவும் விளங்கியவராவர்.

வட-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவனர்களில் ஒருவராக விளங்கியதுடன் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் மூலம் தமிழர் தாயகத்தில் சிங்கள இனவெறிப் படைகள் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ஒரு சில தமிழினத் துரோகிகளின் பிரதேசவாத நச்சுவட்டத்திற்குள் சிக்காது வட-கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எனும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று இறுதிவரை தமிழீழ மண்ணினதும், மக்களினதும் விடுதலைக்காக ஓய்வின்றி உழைத்திருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்களுக்கு எதிரான இனவெறியாட்டம் கோரதாண்டவமாடிய காலகட்டத்தில் தமிழர்களுக்குகான அரசியல் களமானது முட்படுக்கையாக விளங்கியபோதிலும் தான் வகித்துவந்த அரச பதவியை தூக்கியெறிந்துவிட்டு தமிழின விடிவிற்காக அரசியல் களம் கண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்த புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என எவராக இருந்தாலும் சிங்கள இராணுவத்தாலும் அவர்களின் ஆதரவுபெற்ற துணை ஆயுதக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டு வந்தார்கள்.

அந்த வகையில், சிறப்பான அரசியற்பங்கேற்பின் மூலம் சிங்களத் தலைவர்களின் அபிமானம்பெற்று விளங்கிய போதிலும் எக்காலத்திலும் எச்சூழ்நிலையிலும் அடிபணிவு அரசியலை தன் சிந்தைவெளிக்குள் அனுமதிக்க மறுத்து வட-கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தின் விடுதலை ஒன்றே தமிழ் மக்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஆணித்தரமாக இருந்த ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை இழந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் காலங்கள் கரைந்து போனாலும் தமிழீழ மண்ணிற்கும், மக்களுக்கும் அவர் ஆற்றிய விடுதலைப் பணியின் மகத்துவம் மறைந்துவிடாது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*