சுவிற்சர்லாந்தில் ஞானலிங்கேச்சுரத்தில் திருவெம்பாவைத் திருநோன்பு நிறைவு – சனிக்கிழமை, 26. 12. 2015

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

157c2e25-f592-4f88-b76d-f3e683fd4f7d

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!

இப்படித் தொடங்கும் 20 திருவம்பாவைப் பாடல்களால் தெய்வத் தமிழில் திருவாதவூரர் மாணிக்கவாசகப்பெருமான் எம்பெருமான் சிவபெருமான் இணையடிகளைத் தொழுது, உயிரும் சிவமும் இரண்டற இணையும் பெரும் இறையியலைப் பாடி, தூங்கிக்கொண்டிருக்கும் உயிரை ஒளிபெருக்கி எழுப்பி, சைவசித்தாந்தத்தைப் பாவாகப் பாடி யாவரும் சிவபெருமான் அருளினை முழுமையாகப் பெறத் திருவருள் புரிந்துள்ளார்.

மாணிக்கவாசப்பெருமான் தெய்வத் தமிழில் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையையும் திருச்சிற்றம்பலவன், பொன்னம்பலவன் சிவபெருமான் தன் கைப்பட எழுதி, வாதவூரான் எழுத்துத் தேன் என்று மாணிக்கவாசகரை மெச்சி, மாணிக்கவாசகர் அருளிய பாடல்களை உலகறியச் செய்யத் தன் பொன்னம்பலத்துப்படிகளில் திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து எனத் திருச்சாத்திட்டுத் பேரருள் புரிந்தது கற்பனை அல்ல வரலாறு.

157c2e25-f592-4f88-b76d-f3e683fd4f7d

முத்தமிழ் முதல்வனை உருகவைத்த இப்பெரும் திருவெம்பாவை நோன்பு, சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சிவபெருமான் அருளாட்சி புரியும் ஞானலிங்கேச்சுரத்தில் 17. 12. 2015 வியாழக்கிழமை முதல் 26. 12. 2015 சனிக்கிழமை வரை நாளும் காலை 05.00 மணிக்கு வெகுசிறப்பாக நோற்கப்பட்டது. அடியார்கள் திருமுழுக்கு முதல் திருவெம்பாவை ஓதுதல் வரை வழிபாட்டில் நேரடியாகக் பங்கெடுத்து திருச்சீலம் ஆற்றினர்.

திருவெம்பாவை நிறைவான 26. 12. 2015 ஞாயிற்றுக்கிழமை வைகறைப்பொழுதில் தில்லைப்பொன்னம்பலத்துப் பெருமானாக ஞானலிங்கேச்சுரத்தில் எழுந்த ஞானலிங்கேச்சுரரிற்கு சிறப்புத் திருமுழுக்கு இடம்பெற்று, 10 நாட்களும் சிறப்பு வழிபாட்டில் வைக்கப்பட்ட திருக்குடங்களால் திருமுழுக்கும் நடந்தது. ஆயிரமாகத் திரண்ட அடியார்கள் சுவிற்சர்லாந்து மண்ணை தில்லை அம்பலமாக மாற்றினர். காலைப்பொழுதில் பேர்ன் நகரில் திருவம்பாதை; தமிழ் இனிது ஒலித்தது. மூதிரைத் திருக்காட்சியை தேவர்கள் தில்லையில் காண்பது, தில்லைப் புராணம், இதுபோல காலையில் ஞானலிங்கேச்சுரத்தில் மூதிரை (ஆருத்திரா தரிசனம்) அருட்காட்சி நடைபெற்றது. தில்லைக்கூத்தனாக நடராசப்பெருமான் பொற்தேர் ஏறித் திருவுலா வந்தருளிய காட்சி, தில்லைத் தேரில் கூத்தன் வந்தகாட்சியாக அமைந்தது. அடியார்கள் மெய்மறந்து கூட்டுவழிபாடகத் தெய்வத் தமிழ்பாடல்கள் ஓத இத்திருவுலா நடைபெற்றது. நிறைவில் 108 வகையான தில்லைக்கூத்தன் விரும்பி ஏற்ற தமிழ் மரபு உணவகள் அருளமுதாகப் படைக்கப்படடு, நிறைவில் அடியார்களுக்கு அளித்து மகேச்சுரவழிபாட்டுடன் திருவெம்பாவை நோன்பு நிறைவுற்றது.

ஒளிபடங்களை இங்கு காண்க

இங்கே கிளிக் செய்யுங்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit