கற்பழிப்பு கும்பலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க முறையிடாத அரசு வக்கீல் நீக்கம்: மம்தா அரசு அதிரடி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

court

கொல்கத்தாவில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பார்க் தெரு கிளப்பில் இருந்து வெளியே வந்த 35 வயது ஆங்கிலோ- இந்திய பெண்மணி ஒருவரை ஓடும் காரில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா கூடுதல் செசன்ஸ் நீதிபதி சிரன்சிப் பட்டாச்சார்யா ”இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ருமான் கான், நாசர் கான், சுமித் பஜாஜ் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்தாவிட்டால், 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக அரசு வக்கீல் சர்பானி ராய் வாதாடினார். இவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நீதிபதியிடம் முறையிடவில்லை என மேற்கு வங்காள அரசு கருதியது. இதனால் அவரை உடனடியாக அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கி மம்தா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit