தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருதை வென்ற சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

6a55d952-b43e-4d19-8f25-b1ccf6cc5a69_S_secvpf

57 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள 76 வயதான சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளரான ஜாமாலுதீன் முகமது சாலி இந்த வருடத்திற்கான மதிப்புமிக்க தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு வரும் திங்கட்கிழமை இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக புத்தகம் எழுதி வரும் ஜமாலுதீன் முகமது சாலி பல்வேறு இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார். சிங்கப்பூரின் மதிப்புமிக்க கலாச்சார மெடாலியன் மற்றும் தமிழக அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

ஜே.எம். சாலி என்று அழைக்கப்படும் ஜாமாலுதீன் 57 புத்தகங்கள், 80 நாடகங்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவர் எழுதிய வெள்ளை கோடுகள், அலைகள் பேசுகின்றன போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவையாகும். தற்போது சிங்கப்பூர்- இந்தியன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

இந்த விருது குறித்து ஜே.எம். சாலி கூறுகையில் “இந்த விருது எனக்கான அங்கீகாரம் என்று நான் கருதவில்லை. இது சிங்கப்பூருக்கான அங்கீகாரம் என்று கருதுகிறேன். எழுத்தாளர்களின் தாய்மொழியில் மேலும் எழுதுவற்கு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நாம் மேலும் பல விருதுகளை தொடர்ந்து வழங்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

சாலி தனது மனைவி மற்றும் 28 வயது மகனுடன் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். 1939-ம் ஆண்டு சென்னையில் வெற்றிலை வியாபாரிக்கு மகனாக பிறந்த சாலி, 25 வயதில் தமிழ் முரசு செய்தித்தாளில் துணை ஆசிரியராக பணிபுரிவதற்காக சிங்கப்பூர் சென்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit