ஐசிஎப் அப்ரண்டிஸ் தோழர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐசிஎப் மற்றும் இரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த 7000 பேர் தமிழகத்தில் பணி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தாங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும், தங்களுக்கு பணி வழங்கக் கோரியும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை (10-12-2015) ஹேமந்த் குமார் என்பவர் ஐசிஎப் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து உயிர்நீத்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை ஐசிஎப் அப்ரண்டிஸ் முடித்த மாணவர்களும், பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, அவை நிறைவேற்றப்படுவதாக உறுதிமொழி அளிக்கும் வரை ஹேமந்தின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

ஐசிஎப் GM நேரடியாக வந்து உறுதிமொழி அளிக்க வேண்டுமென தோழர்கள் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தோழர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே காவல்துறை தோழர்களை சுற்றி வளைக்க ஆரம்பித்தது. தோழர்கள் அனைவரையும் குண்டுகட்டாக இழுத்து சென்று காவல்துறையினர் அடக்குமுறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பின்னர் மற்றொரு பக்கத்தில் ஹேமந்தின் உடலினை ஆம்புலன்சில் ஏற்றி தூக்கிச் சென்றனர். தோழர்கள் தமிமுன் அன்சாரி, மணியரசன், வேலுமணி, சுந்தரமூர்த்தி, குடந்தை அரசன் என நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில் இந்த அடக்குமுறையினை காவல்துறையினர் நிகழ்த்தினர்.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது எழும்பூரில் வைக்கப்பட்டுள்ளோம். இத்தனை ஆண்டுகளாக இந்த ஐசிஎப் நிர்வாகத்தால் பணி வழங்கப்படாத 25 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக தோழர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஐசிஎப் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த தமிழர் விரோத நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துவதும், அப்ரண்டிஸ் முடித்த தோழர்களுக்கு பணியினை வாங்கித் தருவதும் அவசியம்.
நமது உரிமைகளை நிலைநாட்ட ஐசிஎப் அப்ரண்டிஸ் தோழர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்.
-திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*