தாஜுதீன் விவ­கா­ரத்தால் சபையில் கடும் சர்ச்சை: முஜிபுர் ரஹ்­மானை தாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த எம்.பி.க்கள் : போர்க்­க­ள­மா­னது பாரா­ளு­மன்­றம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழ­மை நாமல் ராஜ­பக்ஷ எம்.பி. உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­போது ஏற்­பட்ட சர்ச்­சை­யினால் சபை போர்க்­க­ள­மாகி­ய­து­டன் மஹிந்த ஆத­ரவு அணி­யினருக்கும் ஆளும் ஐக்­கிய தேசிய கட்­சியினருக்­கு­மி­டையில் கைக­லப்பு நிலை­மை ஏற்­பட்­டது. அத்­து­டன் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மீது சுற்றி வளைத்து தாக்­குதல் நடத்­தவும் முயற்­சிக்­கப்­பட்­டது.

மஹிந்த ஆத­ரவு அணியின் சனத் நிஷாந்­த, இந்­திக்க அனு­ருத்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட எம்.பி.க்கள் தாக்­கு­வ­தற்கு முயற்­சித்­தனர் அத்­து­டன் “பாரா­ளு­மன்­றத்­துக்கு வெ ளியில் வா பார்த்துக் கொள்­கிறேன்” என்று ஜோன்ஸ் டன் பெர்­னாண்டோ எம்.பி. முஜிபுர் ரஹ்­மா­னைப் பார்த்துக் கூறினார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யை சுற்றி வளைத்துக் கொண்ட மஹிந்த ஆத­ரவு அணி­யினர் அவரைக் கண்­ட­படி திட்­டித்­தீர்த்­தனர். அத்­துடன் உங்­களை தலைமை ஆச­னத்தில் அமர்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­க­மாட்டேன் என்று முஜிபுர் ரஹ்­மானைப் பார்த்து சத்­த­மிட்­ட சிரேஷ்ட உறுப்­பினர் தினேஷ் குண­வர்­த்தன முஜிபுர் ரஹ்­மானின் முகத்­துக்கு

முன்­பாக கையை நீட்டி நெருங்கிச் சென்று கூச்­ச­லிட்­டார்.

முஜிபுர் ரஹ்­மானை தாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த மேற்­படி எம்.பி.க்களுடன் கெஹ­லிய ரம்­புக்­வெல, காமினி லொக்­குகே, பந்­துல குண­வர்­தன, செஹான் சேம­சிங்க உள்­ளிட்­டோரும் இணைந்து கொண்­டனர்.

இவ்­வாறு நேற்­யைய தினம் மாலை வேளையில் பாரா­ளு­மன்றம் யுத்த கள­மாக மாறி­ய­மை­யி­னால் அமர்­வுகள் இரண்டு தட­வைகள் ஒத்தி வைக்­கப்­பட்­டன. மாலை 04.05 மணி­ய­ளவில் முத­லா­வது தட­வை­யாக ஒத்­தி­வைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றம் பின்னர் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் சபை நடுவே கூடி சபா­நா­ய­க­ருக்கு அச்­சு­றுத்தும் வகையில் நடந்துக் கொண்­டனர். அத்­துடன் சபை நடுவே அமைச்சர் நவின் திஸா­நா­யக்­கவும், மஹிந்த ஆத­ரவு அணி உறுப்­பி­ன­ரான ஜோன்ஸ்டன் பெர்­னாண்­டோ­வுக்­கு­மி­டையில் கடு­மை­யான வாய்த்­தர்க்கம் மூண்­டது. இதன்­போதே மாலை 04.45 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்றம் மீண்டும் ஒத்தி வைக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெ ள்ளிக்­கி­ழ­மை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் வெளி­வி­வ­கார அமைச்சின் மீதான குழு நிலை­வி­வாதம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது நாமல் ராஜ­பக்ஷ எம்.பி. உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார்.

நாமல்

இதன்­போது உரை­யாற்­றி­ய நாமல் ராஜ­பக்ஷ சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையின் உயர்ஸ்­தா­னிகரின் விசா­ர­ணை அறிக்­கையின் பிர­காரம் இலங்­கையில் திட்­ட­மி­டப்­பட்ட இனப் படு­கொ­லைகள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதனை அமைச்­ச­ர­வைக்கு அறி­வித்­தீர்­களா உங்­க­ளது ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­ளுக்­கேனும் கூறி­னீர்­களா என்று வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதே­வேளை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் பதி­ல­ளித்துக் கொண்­டி­ருந்தார்.

முஜிபுர் தலை­யீடு

இதன்­போது ஒரு கட்­டத்தில் சபையில் எழுந்­தி­ருந்த கூச்­ச­லுக்கு மத்­தியில் தாஜி­தீனின் படு­கொ­லையும் திட்­ட­மி­டப்­பட்­ட­துதான் என்று முஜிபுர் ரஹ்மான் கூறினார். இதன்­போது சபையில் மேலும் கூச்சல் எழுந்­தது. இதே நிலையில் நாமல் எம்.பி.யின் உரை நிறை­வுக்கு வந்­தது.

கல­வரம்

இத­னை­ய­டுத்து உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­று­வ­தற்காக அழைக்­கப்­பட்டார். இதன்­போது உரை­யாற்­று­வ­தற்கு எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி., இங்கு திட்­ட­மி­டப்­பட்ட படு­கொலை தொடர்பில் பேசு­கின்­றனர். ரகர் வீரர் தாஜி­தீன் படு­கொலை செய்­யப்­பட்­டதும் இவ்­வா­றுதான். தாஜி­தீனைக் கொன்று அழித்­த­வர்­களே இங்கு வந்து படு­கொலை எனப் பேசு­கின்­றனர் என்றார். இதன்­போது மஹிந்த அணி­யினர் குழுப்பம் விளை­வித்­தனர். அத்­துடன் சனத் நிஷாந்த இந்­திக்க அனு­ருத்த மற்றும் ஜோன்சன்ட் பெர்­னாண்டோ ஆகியோர் முஜிபுர் ரஹ்­மானை சுற்­றி­வளைத்து தாக்­கு­வ­தற்கு முற்­பட்­டனர். இவர்­க­ளுடன் கெஹ­லிய ரம்­புக்­வெல, சி.பி. ரத்­ணா­யக்க, பந்­துல குண­வர்­தன, காமினி லொக்­குகே உள்­ளிட்ட பலரும் சுற்­றி­வ­ளைத்­தனர்.

எனினும் ஆளும் கட்சி எம்.பி.க்களான நவவி உள்­ளிட்ட எம்.பி.க்கள் சிலர் முஜிபுர் ரஹ்­மானைத் தாக்­க­வி­டாது பாது­காத்­தனர். இதன் பின்­னரே படைக்­கள சேவி­தர்கள் சபைக்குள் ஓடி வந்­தனர். அத்­துடன் சபை உத­வி­யா­ளர்­களும் இடை­யி­டையே நின்று கொண்­டி­ருந்­தனர்.

செஹான் சேம­சிங்க

இதன்­போது ஒழுக்கப் பிரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய மஹிந்த ஆத­ரவு அணி செஹான் சேம­சிங்க உறுப்­பினர் (முஜிபுர் ரஹ்மான்) முன்­வைத்த விட­ய­மா­னது நீதி­மன்­றத்தின் விசா­ர­ணை­யி­லுள்ள விட­ய­மாகும். எனவே அக்­கூற்று வாபஸ் பெறப்­பட வேண்டும் என்றார்.

சுஜீவ

இத­னை­ய­டுத்து ஒழுக்கப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய சுஜீவ சேன­சிங்க எம்.பி. குறித்த விடயம் நீதி­மன்ற விசா­ர­ணையில் இருக்­கின்­ற­போதும் சம்­பவம் தொடர்­பாக பிரஸ்­தா­பித்து உரை­யாற்­று­வ­தற்கு தடை­யில்லை என்று வலி­யு­றுத்­தினார்.

இதற்கு மஹிந்த ஆத­ரவு அணி­யினர் கடு­மை­யான எதிர்ப்புத் தெரி­வித்துக் கொண்­டி­ருந்த அதே­வேளை முஜிபுர் ரஹ்­மானை சூழ்ந்து தாக்­கு­வ­தற்கு கடும் முயற்சி மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன் முஜிபுர் ரஹ்­மா­னிடம் வாக்­கு­வா­தப்­பட்­ட­துடன் மல்­லுக்­கட்டி தாக்­கு­த­வற்கு முற்­பட்­டனர். இதனால் பாரா­ளு­மன்றம் நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் யுத்த தள­மாக காட்­சி­ய­ளித்­தது. இரு தரப்­பி­லி­ருந்தும் கடும் வாய்த்­தர்க்­கங்கள் எழுந்­தி­ருந்­தன.

முத­லா­வது தடவை சபை ஒத்­தி­வைப்பு

சபையின் நிலை­வ­ரத்தைக் கட்­டு­ப­டுத்­து­வ­தற்கு பெரும் பிர­யத்­தனங்­களை மேற்­கொண்ட சபைக்குத் தலைமை தாங்­கிய எட்வர்ட் குண­சே­கர எம்.பி. 4.05 மணி­ய­ளவில் சபையை ஒத்­தி­வைப்­ப­தாக கூறி ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து சென்றார்.

சபை ஒத்­தி­வைக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் சற்று அமை­தி­யா­னது

இத­னை­ய­டுத்து சபை மீண்டும் 4.20 மணி­ய­ளவில் கூடி­யது. இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலைமை ஆச­னத்தில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

தினேஷ்

சபை கூடி­யதும் தினேஷ் குண­வர்­தன எம்.பி. எழுந்­து­நின்று ஒழுக்­கப்­பி­ரச்­சினை ஒன்றை எழுப்­பினார். எனினும் ஒழுக்கப் பிரச்­சி­னைக்கு மறுப்புத் தெரி­வித்த சபா­நா­யகர் முதலில் எனது அறி­வித்­த­லுக்கு செவி மடுங்கள் பிறகு ஒழுக்கப் பிரச்­சி­னைப்­பற்றி பார்க்க முடியும் என்றார்.

இத­னை­ய­டுத்து அறி­வித்தல் விடுத்த சபா­ந­யாகர் கரு ஜய­சூ­ரிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த சபையின் கௌர­வத்தை பாது­காக்க வேண்டும். அத­னை­வி­டுத்து பாரா­ளு­மன்­ற­ததை பிர­தேச சபை போன்று பயன்­ப­டுத்த முடி­யாது அவ்­வாறு செயற்­ப­டவும் வேண்டாம் என்றார்.

தினேஷ்

இதே­வேளை ஓழுக்கப் பிரச்­சி­னையை எழுப்­பிய தினேஷ் குண­வர்­தன எம்.பி. முஜிபுர் ரஹ்­மானால் கூறப்­பட்ட விட­ய­மா­னது தொலைக்­காட்சி நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்­டது. எனவே அதே நேரடி ஒளி­ப­ரப்­பி­னூ­டாக அவர் கூறிய அதே­வி­டயம் அவரால் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

இதன்­போது மஹிந்த ஆத­ரவு அணியின் அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று கோஷம் எழுப்பி கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் மீண்டும் தினேஷ் எம்.பி ஒழுக்கப் பிரச்­சி­னையை எழுப்­பிய போதும் சபா­நா­யகர் அதற்கு இணங்­க­வில்லை.

அத்துடன் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யை பேசுவதற்கு அனுமதித்தார்

முஜிபுர்

இதனையடுத்து பேசிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி . கூறுகையில் இங்கு பலத்திட்டமிடப்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னெலிகொட ஆகியோரும் கூட இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டுள்னர்.

இதேவேளை தாஜிதீனின் கொலையும் திட்டமிடப்பட்டது என்றே கூறினேன்.

இதன்போது சனத் நிஷாந்த இந்திக்க அனுருத்த மற்றும் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் என்னைத் தாக்குவதற்க்கு முயற்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினரான என்னை இந்த சபையில் இரு முறை தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்­திற்கு வெ ளியே வா பார்த்துக் கொள்­கிறேன் என்றும் தாக்­குதல் நடத்­து­வா­தா­கவும் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ எம்.பி. அச்­சு­றுத்­தினார். ஆகவே எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்­கான பொறுப்­பினை சபா­நா­ய­கரே ஏற்க வேண்டும் என்றார்.

இதன்­போதும் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் கூச்­ச­லிட்டுக் குழுப்பம் விளை­வித்­தனர். அத்­துடன் தினேஷ் குண­வர்­தன எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய போது ஏனைய உறுப்­பி­னர்­களும் எழுந்து நின்­றனர்.

எனினும் தினேஷ் குண­வர்­த­னவின் ஒழுங்குப் பிரச்­சினைக் கோரிக்­கையை சபா­நா­யகர் நிரா­க­ரித்தார்.

சபை நடுவே கூடினர்.

இத­னை­ய­டுத்து சபை நடுவே கூடிய மஹிந்த ஆத­ரவு அணி­யினர் சபா­நா­க­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தனர். இந் நிலை நீடித்­தி­ருந்­ததால் 4.45 மணி­ய­ளவில் மீண்டும் சபையை சபா­நா­யகர் ஒத்­தி­வைத்தார்.

கூடி­யது

இத­னை­ய­டுத்து 6.10 மணி­ய­ளவில் மீண்டும் சபை கூடிய போது சபா­நா­யகர் சபையின் கௌர­வத்தைப் பேணு­மாறு கேட்டுக் கொண்டார். அத்­துடன் சபைக்கு அறிவித்தல் விடுத்த சபாநாயகர் வீடியோ மற்றும் ஹன்சாட் ஆகியவற்றைப் பரிசிலித்துப் பார்த்ததில் எந்தவொரு எம்.பி.யினதோ குடும்பத்தாரினதோ பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும் தாஜிதீனின் படுகொலைக்கு காரணமானவர்கள் சபையில் வந்து பேசுகின்றனர் என்று கூறப்பட்ட வாசகத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிடுகிறேன் என்றார்.

வெ ளிநடப்பு

இதனையடுத்து விவாதத்தில் பேசிய தினேஷ் குணவர்தன எம்.பி

வெ ளிவிவகார அமைச்சு தொடர்பில் பேசிக் கொண்டிருந்தபோது ஆளும் கட்சியினர் இடையூறு விளைவித்தனர். இதனால் கூச்சல் நிலை எழுந்திருந்தது.

இதேவேளை தாம் சபையிலிருந்து வெ ளியேறுவதாக கூறி தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹிந்த ஆதரவு அணியினர் சபையிலிருந்து வெ ளியேறினர்.

இதன்போது ஆளும் கட்சியினர் “உ” சத்தமிட்டனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*