இனி பசி இல்லை – சாப்பாடு இல்லை – சூரியன் மட்டுமே!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

0006c9_a1b5dc3e5208946fc3a01d851f85d769

உடல் பருமனைக் குறைக்க அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளாமல், பச்சிலை சாறுகளை குடித்து வாழ்ந்து வருபவர்கள் அதையும் தாண்டி தற்போது ஒரு வித்தியாசமாக மேனியைப் பேணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

உடலின் அழகை அளவாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் முழுப்பட்டினி முதற்கொண்டு எத்தனையோ முறைகளை டயட்டிங் வெறியர்கள் பொதுவாக கையாண்டு வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது புதிதாக சூரியனை வெறித்துப் பார்க்கும் பயிற்சியும் இணைந்துள்ளது.

சூரியனில் இருந்து சோலார் பேட்டரிபோல மனிதர்கள் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் முறையை தற்போது சீனாவின் ஹாங்காங்கில் உள்ள சாம் கா கிராமத்தின் கடற்கரையில் சில பெண்கள் கடைபிடித்துவருகின்றனர். இவர்களைப் பொருத்தவரை, உணவு உண்பதற்கு பதிலாக, சூரிய சக்தியை பெற்றுக் கொள்வதே போதுமாம்.
சூரியன் மாலையில் மறையும்போது அதை வெறித்து நின்று பார்ப்பது, நமக்கு உணவு அளிக்கும் கலோரிகளுக்கு இணையான கலோரிகளை நமது உடலுக்கு வழங்குமாம். இந்த சிகிச்சை முறையினை முழுமையாக முடித்தவர்கள் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்வர். மற்றவர்கள் உணவை அறவே தவிர்கின்றனராம்.

இந்த சிகிச்சையில் இருக்கும் சிலர், இந்த பயிற்சியை கடவுளை வழிபடுவதில் ஓர் அங்கமாகவும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit