90 – 97 களில் பிறந்தவரா நீங்கள்..? இத படிங்க…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நீங்கள் மிகவும் கர்வமாக, திமிராக, பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் நான் ஒரு 90-களில் பிறந்த குழந்தை என. ஆம், 90-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர்கள். ஒருவகையில் நாம் பெற்ற அன்றைய சந்தோசங்கள் என்ன என்று இன்றைய தலைமுறை குழந்தைகள் தெரியாமல் வளர்கிறார்கள் என்பது வருத்தமும் கூட.

இன்றைய ஸ்மார்ட் போன்கள் உலகை விரல் நுனிக்கு கொண்டு வந்தாலும். உறவுகளையும், உணர்வுகளையும் இவ்வுலகை விட்டே நெடும் தூரத்திற்கு அனுப்பிவிட்டது என்பது தான் உண்மை. உணர்வு பிணைப்பு, பெற்றோர் , தாத்தா பாட்டி அரவணைப்பு என்பவை எல்லாம் இன்று மிகவும் குறைந்து வருகிறது. இந்த வர்த்தக உலகம் தொழில் அதிபர்களை சார்ந்தது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றி, வெறும் சாமானியர்களாக மட்டுமே இருந்து நாம் அனுபவித்த அன்றைய நினைவுகளில் சிலவன இங்கே நினைவு கூர்ந்து பார்க்கலாம் வாருங்கள்…..

பென்சில் ரப்பர்
எல்.கே.ஜி. முதல் ஆரம்ப பள்ளியை முடிக்கும் வரை பெரும்பாலான பென்சில் பாக்ஸில் இந்த நிலையில் சூயிங்கம் போன்று மெல்லப்பட்ட ஓரிரு பென்சில்கள் இருக்கும். டீச்சர் வகுப்பெடுக்கும் போது வாய் அசைப்போட நம்மில் 99% பேர் பயன்படுத்தியது இதை தான்.

நடராஜ் வடிவியல் பாக்ஸ்
நடராஜ் ஜியாமென்டரி பாக்ஸ், 90-களில் மிகவும் பிரபலமானது. கணக்கு பாடத்திற்கு பயன்படுத்துவதைவிட, பென்சில்கள் கொண்டு இதை ட்ரம்ஸ் போல பயன்படுத்தியது தான் அதிகம்.

வாக்மேன்
நமக்கு பிடித்த பாடல்களை பதிவு செய்து வாக்மேனில் கேட்டப்படி அந்த பெரிய ஹெட்செட்டுடன் தெருக்களில் அலைந்த காலத்தை யாராலும் மறக்க முடியாத அனுபவம்.

பேப்பர் கப்பல்
விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்கு செல்லும் போது ஆத்தங்கரை ஓரத்திலும், மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் செல்லும் போதும் இந்த பேப்பர் கப்பலை செய்துவிட நாம் என்றும் மறந்தது இல்லை. இந்த சந்தோசத்தை இன்றைய மொபைல் செயலிகள் என்றும் தர முடியாது.

பில்லா துப்பாக்கி
தீபாவளி சீசன் வந்துவிட்டாலே போலீஸ் திருடன் விளையாட்டு பில்லா ரேஞ்சுக்கு சூடுப் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதற்கு காரணம் பில்டப் ஏற்றும் இந்த விளையாட்டு தீபாவளி துப்பாக்கி தான்.

99999 in 1
மொத்தமே பத்து விளையாட்டு தான் இருக்கும் என இப்போது தெரியும். ஆனால், அன்று 999 in 1, 9999 in 1 என்று அச்சிடப்பட்டு விற்கப்படும் விளையாட்டுகள் மிகவும் பிரபலம். ஓடி ஆடி விளையாடிய குழந்தைகளை முதன் முதலில் முடக்கி ஒரே இடத்தில் உட்கார வைத்த முதல் விளையாட்டு இது தான்.

லைட் எரியும் ஷூ
90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும் இந்த லைட் எரியும் ஷூ எவ்வளவு கெத்து என்று. ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக ஷூ வாங்கினாலும் இதற்கு ஈடு இது மட்டுமே.

அரிக்கேன் விளக்கு
அப்போதெல்லாம் கரண்ட் கட் மிகவும் அரிது. எப்போதாவது தான் நடக்கும். உடனே பரணில் வைக்கப்பட்ட இந்த அரிக்கேன் விளக்கை எடுத்து மண்ணெண்ணெய் ஊற்றி பத்தவைப்பது ஓர் விதமான சொல்ல முடியாத மகிழ்ச்சி. அதை மேலும் கீழும் ஏற்றி, இறக்கி விளையாடி திட்டு வாங்கிய அனுபவம் அனைவருக்கும் இருக்கும்.

ரெஸ்ட்லிங் கார்ட்ஸ்
வருடா வருடம் தவறாமல் இந்த கார்டுகள் புதுப் பொலிவுடன் விற்கப்படும். இதை வாங்கி நண்பர்களுடன் சுற்றி அமர்ந்து விளையாடுவது அருமையான அனுபவம்.

சுவிட்ச் பாக்ஸ்
கருப்பு நிற பழைய சுவிட்ச் பாக்ஸ், ஆங்காங்கே வீடுகளில் இருக்கும். இன்றும் ஓர் வீடு மிகவும் பழமையானது என்பதை இந்த சுவிட்ச் பாக்ஸை வைத்து கண்டறிந்துவிட முடியும்.

தேர்வட்டை
ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவற்றை வாங்கும் போது இவை இலவசமாகவும் கிடைத்தது உண்டு. ஒவ்வொரு பள்ளி புத்தகப் பையிலும் புத்தகங்கள் சரியாமல் இருக்க தண்டுவடத்தை போல இது கடைசியில் பின்புறம் வைக்கப்பட்டிருக்கும். கண்டிப்பாக நீங்களும் இவ்வாறு செய்தவராக தான் இருப்பீர்கள்.

பம்பரம், கோலிக்குண்டு
பம்பரம், பச்சை குதிரை, கோலிக்குண்டு, மேடு பள்ளம் என எண்ணற்ற விளையாட்டுகள். இப்போது நினைத்தலும் அந்த குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்றுவிடும்.

ஜூஸ்
90-களின் குழந்தைகள் வார இறுதி மற்றும் கோடை விடுமுறைகளில் அதிகம் குடித்த, ருசித்த ஜூஸ் இது தான். அது ஒரு கனா காலம்…..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*