முடிவுக்கு கொண்டுவருவோம்

பிறப்பு : - இறப்பு :

உலக மய­மாதல் என்ற சமு­தாய ஓட்­டத்தின் போது பல சிக்­கல்­களை சமூகம் என்ற ரீதியில் அனைத்து மக்­களும் அனு­ப­விக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. அவ்­வாறு எதிர்­நோக்கும் பாரிய சிக்­கல்­களில் பிர­தான அச்­சு­றுத்­த­லான ஒன்­றாக எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோய்த் தொற்று மாறி­யுள்­ளது. நவீ­னத்­துவம் மற்றும் நக­ர­ம­ய­மா­தலை நோக்கி வேக­மாக பய­ணிக்கும் நவீன நாடு­க­ளி­லேயே எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றுகள் மிக வேக­மாக அதி­க­ரிப்­ப­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

இன்று உலக சனத்­தொ­கையில் 15.8 மில்­லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்­றுடன் பய­ணிக்­கின்­றனர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு இறுதி வரையில் இந்த எண்­ணிக்கை 34 வீதத்தால் அதி­க­ரித்­துள்­ளது. அதேபோல் 2000ஆம் ஆண்டில் இருந்து எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தாக்­கத்தால் இறந்தோர் 42 வீதத்தை குறித்து நிற்­கின்­றது. இவ்­வாறு ஒரு அச்­சு­றுத்­த­லான நிலையில் தொடர்ந்தும் பய­ணித்தால் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இந்த தொகை 28 மில்­லியன் தொடக்கம் 37 மில்­லியன் சனத்­தொ­கையை எட்டும் என்ற மிகப்­பெ­ரிய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த 10 ஆண்­டு­களை கடக்கும் சந்­தர்ப்­பத்தில் உலகில் 90வீத­மான மக்கள் எச்.ஐ.வி தொற்­றினால் பாதிக்­கப்­ப­டுவர் என்ற ஐயம் உள்­ளது.

அதேபோல் இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில் உலக சனத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் உலகில் அனை­வரும் எச்.ஐ.வி தொற்­றா­ளர்­க­ளாக இருக்கும் வாய்ப்­புகள் இருப்­ப­தாக உலக சுகா­தார மையம் தெரி­விக்­கின்­றது. ஆகவே இன்று உலகில் அனைத்து நாடு­களும் எதிர்­நோக்கும் பிர­தான பிரச்­சி­னை­களில் முக்­கிய இடத்தை எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று பீடித்­துள்­ளது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. எனினும் மக்கள் இந்த நோய் தொடர்பில் அதிக அக்­கறை காட்­ட­வில்­லையா அல்­லது இவ்­வா­றான ஒரு தொற்­றுநோய் தொடர்பில் விழிப்­பு­ணர்வு கொள்­ள­வில்­லையா என்ற மிகப்­பெ­ரிய கேள்­வியும் எழவே செய்­கின்­றது.

இன்று நாம் 21ஆம் நூற்­றாண்டில் பய­ணித்­துக்­கொண்­டுள்ளோம். இந்த கால­கட்டம் உண்­மையில் இளைஞர் சமு­தா­யத்தின் அச்­சா­ணியில் பய­ணிக்­கின்­றது என்­ப­தில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதேபோல் கற்றோர் சமு­தாயம் உரு­வா­கி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் பாலு­றவு விட­யத்­திலும் நோய்கள் தொடர்­பிலும் நாம் அதி­க­ளவில் அக்­கறை காட்­ட­வில்லை என்­பது மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லான விட­யமும் கூட. இன்று உலகில் அதி­க­ளவில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோய் தாக்கம் இளைஞர் சமு­தா­யத்­தி­டமே பர­வு­கி­றது. அதா­வது உலக சனத்­தொ­கையில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றுக்­குள்­ளான மக்­களில் 50வீதத்­துக்கும் அதி­க­மாக இளம் சமூ­கத்­தையே பாதித்­துள்­ளது.

ஆகவே இவ்­வா­றான அச்­சத்தின் மத்­தியில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றை முற்­றாக கட்­டுப்­ப­டுத்தும் வகையில் 2030ஆம் ஆண்டை இலக்­காக வைத்து ஐக்­கிய நாடு­களின் சர்­வ­தேச சுகா­தார மையம் தனது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. உலகில் இந்த கால­கட்­டத்தில் உலகில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றினை முழு­மை­யாக தடுப்­பது அவ­சியம் என்ற எச்­ச­ரிக்­கை­யுடன் அதற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். மருத்­துவ ரீதியில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றினை குணப்­ப­டுத்தும் எந்­த­வொரு தேர்­வையும் இது­வ­ரையில் கண்­டு­பி­டிக்­க­வில்லை. அதற்­கான ஆராய்­சிகள் அதி தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்­தாலும் இது வரையில் அதற்­கான அறி­கு­றிகள் தென்­ப­ட­வில்லை. உலகில் அனைத்து நாடு­களும் அதற்­கான ஆத­ரவை தெரி­வித்து சர்­வ­தேச சுகா­தார மையத்­துடன் இணைந்த வகையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக உலக சுகா­தார மையம் தெரி­வித்து வரு­கின்­றது.

விழிப்­பு­ணர்வு, மருத்­துவம், கல்­வி­மட்டம் அனைத்­திலும் உலக மக்கள் முன்­ன­ணியில் பய­ணிப்­பதை போலவே எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­று­டனும் மக்கள் பய­ணிக்­கின்­றனர் என்­பதும் மிகத் தெளி­வா­கி­யுள்­ளது. உலகில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றின் வீதம் மிக­வே­க­மான காணப்­ப­டு­கின்­றது எனின் அதற்­கான சமூக கலா­சார மற்றும் விழிப்­பு­ணர்­வற்ற செயற்­பா­டு­களே பிர­தான கார­ண­மாகும்.

பாலியல் ஈடு­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இளம் சமு­தாயம் அதை ஆரோக்­கி­ய­மாக தக்­க­வைக்க தவ­று­வதே அதிக சிக்கல் நிலை­மை­களை உரு­வாக்­கி­யுள்­ளது எனலாம். பொது­வான இளம் சமு­தாயம் இந்த சிக்­கலை எதிர்­கொள்­­வதில் மிகப்­பெ­ரிய அழுத்­தத்தை எதிர்­கொள்­வது தெளி­வாக தெரி­கின்­றது. இன்று உலகில் 1.7பில்­லியன் ஆணு­றைகள் விநி­யோ­க­மா­கின்­ற­தாக ஒரு ஆய்வு தெரி­விக்­கின்­றது. எனினும் 2020ஆம் ஆண்­ட­ளவில் இந்த தொகை 20பில்­லி­யனை எட்டும் என்ற எதிர்­பார்ப்பும் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதேபோல் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றுக்கு உள்­ளாகும் வீதம் அதி­க­மாக கொண்ட நாடு­களின் வரி­சையில் ஆபி­ரிக்க கண்ட நாடு­களே முன்­னி­லையில் உள்­ளன. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸின் தாயகம் என ஆபி­ரிக்க கண்­டத்தை வர்­ணிக்கும் அள­வுக்கு இந்த நாடு­களில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று பர­வி­யுள்­ளது. இந்த நாடு­களில் போதி­ய­ளவு சுகா­தார வச­திகள் மற்றும் கல்வி வீதம் குறை­வாக இருக்­கின்­றமை முக்­கிய கார­ண­மாகும். ஆனால் எப்­போதும் ஆதிக்க நாடு­களின் பரி­சோ­தனை எலி­யாக இந்த வறுமை நாடு­களை பயன்­ப­டுத்தும் வழக்­கமும் உள்­ளது. அவ்­வா­றான நிலையில் நோய்த்­த­டுப்பு மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக இவர்­களை பயன்­ப­டுத்­து­வ­தாக நீண்­ட­கால குற்­றச்­சாட்டும் இருக்­கத்தான் செய்­கின்­றது.

அதேபோல் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று பரவும் நாடு­களின் வரி­சையில் தென் அமெ­ரிக்க நாடு­களும் மத்­திய ஆசிய நாடு­களும் உள்­ளன. அமெ­ரிக்க கண்ட நாடு­க­ளிலும் ஆசிய கண்ட நாடு­க­ளிலும் எச்.ஐ.வி தொற்று அதி­க­ரிக்க இந்த நாடு­களின் கலா­சார மற்றும் போதைப்­பொருள் பாவ­னையே பிர­தான கார­ண­மாகும். குறிப்­பாக மேற்­கத்­தேய கலா­சார மோகம் இன்று ஆசிய நாடு­க­ளையே அதிகம் தாக்­கி­யுள்­ளது. இந்த நாடு­களின் பிர­தான காலா­சா­ர­மாக இன்று ஓரி­னச்­சேர்க்கை மற்றும் போதைப்­பொருள் பாவனை மாறி­விட்­டது.

ஓரி­னச்­சேர்க்கை மூல­மாக எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று பரவ அதிக வாய்ப்­புகள் உள்­ளன. குறிப்­பாக இந்த கலா­சா­ரத்தில் ஆண்களே அதி­க­மாக பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இன்று உல­கிலும் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றில் ஆசிய மற்றும் அமெ­ரிக்க நாடு­களின் ஆண்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு இதுவே பிர­தான கார­ண­மாகும். அதேபோல் மத்­திய கிழக்கு மற்றும் ஐரோப்­பிய நாடு­களில் இந்த வீதம் குறை­வா­ன­தா­கவே உள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. எனினும் உல­க­ளா­விய ரீதியில் ஒப்­பிடுகையில் நாளுக்கு நாள் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றின் வீதம் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது.

உல­க­ளா­விய ரீதியில் ஒப்­பி­டுகையில் கர்ப்­பிணித்தாய்மார் பத்து பேரில் இரு­வ­ருக்கு எச்.ஐ.வி தொற்று அபாயம் உள்­ளது. அதேபோல் 25 வீத­மான தாய்­மாரின் தாய்ப்­பாலில் இருந்து குழந்­தைக்கு எச்.ஐ.வி தொற்று பரவும் ஆபத்து உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. உலக சனத்­தொ­கையில் 25 வீத­மான குழந்­தைகள் கடந்த 2009- – 2014 வரை­யி­லான கால­கட்­டத்தில் தொற்­றுக்­குள்­ளான அறிக்­கையை உலக சுகா­தார மையம் வெளி­யிட்­டுள்­ளது.

ஆகவே எல்லா வகை­யிலும் முழு சமூ­கத்­தையும் பாதிக்கும் வகையில் இன்று எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று மாறி­யுள்­ளமை குறிப்­பிட்­டத்­தக்­கது. இலங்­கையைப் பொறுத்­த­வரை சர்­வ­தேச மதிப்­பீட்டில் மிகவும் குறை­வான பாதிப்­புகள் உள்ள பட்­டி­யலில் தான் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இலங்­கையின் சனத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இது உயர்­வா­கேவே காணப்­ப­டு­கின்­றது. அதிலும் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் படி எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றுக்கு உள்­ளா­ன­வர்­களின் மதிப்­பீட்டுள் ஆண்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதேபோல் இன்று இலங்­கையின் பாலியல் நோய்கள் மற்றும் பாலியல் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்­ளமை இதற்­கான முக்­கிய கார­ண­மாகும். கடந்த காலங்­களை விடவும் இப்­போது நாட்டில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றா­ளர்கள் அதி­க­ளவில் இனங்­கா­ணப்­ப­டு­கின்­றனர். கடந்த காலங்­களில் இலங்­கையில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோயா­ளர்கள் மிகவும் குறை­வா­கவே காணப்­பட்­டனர். எனினும் அண்­மைய கால­கட்­டத்தில் இந்த வீதம் அதி­க­ரி­த்துள்­ளது. இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இது­வ­ரையில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று சந்­தே­கத்தில் 3 இலட்­சத்து 80ஆயி­ரத்து 367 பேர் பரி­சோ­தி­க் கப்­பட்­டுள்­ள­துடன் இதில் 2ஆயி­ரத்து 241 பேர் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். அதேபோல் இலங்­கையில் இது­வ­ரையில் 357பேர் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றினால் உயிரி­ழந்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்­பாக பாலியல் முறை­களில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்று பரவும் வாய்ப்­புகள் அதி­க­மாக இருக்­கின்­ற­மை­யினால் பாலியல் செயற்­பா­டு­களில் மக்கள் அதிகம் அவ­தானம் மற்றும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்­பதே சுகா­தார திணைக்­க­ளத்தின் முக்­கிய நோக்­க­மாக உள்­ளது. இலங்­கையில் வடக்கு மற்றும் மேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வி­லான எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்­றா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இந்த பகு­தி­களில் ஒரு வாரத்­திற்கு 9 பேர் என்ற ரீதியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே இலங்கை இன்று சிவப்பு எச்­ச­ரிக்கை நிலையில் உள்­ளது என்­பது உண்­மை­யாகும்.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் ஏனைய நாடு­களைப் போல் அல்­லாது கலா­சாரம் சமய பண்­பா­டு­களை அதிகம் கவர்ந்த நாடாகும். அதேபோல் கல்வி மட்­டத்­திலும் எமது நாடு உயர் வீதத்­தையே காட்­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இங்கு மேற்­கத்­தேய மோகத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது பொருந்தப் போவ­தில்லை. நவீ­னத்­துவம், உலகமயமாதல் என்ற போர்வையில் கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்த வேண்டியது தேவை எமக்கு இல்லை. அதேபோல் இளம் சமுதாயம் நாட்டில் மிக முக்கிய பங்கினை செய்து வருகின்றது. எனவே பாலியல் ரீதியிலான செயற்பாடுகளில் இளைஞர் சமுதாயம் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். இன்று இலங்கையை பொறுத்தவரையில் வாலிபப் பருவத்தில் இந்த எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றினை நாடிச் செல்லும் வீதமே அதிகமாகும். குறிப்பாக 23 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டோர் இலங்கையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2030ஆம் ஆண்டுகளில் உலகில் முழுமையாக எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றை முற்றாக அழிக்க சர்வதேச சுகாதார அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. இம்முறை உலக சுகாதார அமைப்பின் தொனிப்பொருளும் இதுவேயாகும். ஆகவே இலங்கையும் இந்த கூட்டணியில் கைகோர்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமது ஆரோக்கியமே எதிர்கால இலங்கையை கட்டியெழுப்பும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit