புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை தானாக வரும்!

பிறப்பு : - இறப்பு :

தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடாஎன்ற காலம் போய்,தமிழன் என்று சொல்லடா ஒற்றுமையின்றி வாழடாஎன்ற காலம் உருவாகியுள்ளது. உலகில் ஒவ்வொரு இன மக்களிடையே ஒற்றுமையின்மை உள்ளது என்பது பொதுவான உண்மை. ஆனால் இலங்கைதீவில், விசேடமாக முள்ளீவாய்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை பலிகொடுத்தும்,பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் கைது, தடுப்புகாவல், சித்திரவதை, பாலியல் வன்முறை, காணமல் போதல் போன்று மிகவும் மோசமான வன்முறைகளை சிறிலங்கா ஆட்சியாளர்களிடமிருந்து அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் புலம்பெயர் வாழ் தமிழரிடையே ஒற்றுமையின்மை என்பது விகைப்பிற்குரியது.

 

ஆகையால், புலம் பெயர் வாழ் தமிழர் எதற்காக பிரிந்து சின்னா பின்னமாக சிறு சிறு குழுக்காளாக செயல்பாடுகிறார்கள் என்பதை ஆராய்வது, எமது தலையாய கடமையாகும்.

 

முள்ளீவாய்கால் பேர் ஆவலங்களை தொடர்ந்து, அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல், என்னால் எழுதப்பட்ட சகல கட்டுரைகளிலும், யாவரும் ஒற்றுமையாக இந்தியாவின் உதவியுடன், எமது அரசியல் விடுதலை போராட்டத்தை தொடரவேண்டுமென எழுதி வந்தேன். பிரிவுகளும் குழுக்களும் அதிகரித்து கொண்டே சென்றதினால், யாரும் ஒற்றுமையாககூடிய காரணிகள் காணப்படாதனால், அதிகமாக 2011ம் ஆண்டின் பிற்பகுதியில், “வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள்என  எதினேன்.

 

அதாவது, நீங்கள் யாரும் ஒற்றுமையாக செயற்படாவிட்டாலும் காரியமில்லை, சில வேலை திட்டங்களில் இணைந்து வேலைகளை முன்னெடுங்களென எழுதினேன். ஆனால் இவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகியது”.

 

ஓற்றுமையை விரும்பாதவர்கள்சிறிலங்காவின் ஆட்சியாளரான சிங்கள அரசியல் தலைவர்கள், தெற்கில் வாழும் சிங்கள மக்களின் அன்றைய இன்றைய அணுகுமுறைகளை கவனமாக அவதானிக் வேண்டும். அவர்களிடையே வேறுபட்ட அரசியல் கட்சிகள், சாதி, சமய, சமூக, பிராந்திய வேறுபாடுகள் பல இருந்துள்ள போதிலும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர்களிற்குள் உள்ள ஒற்றுமையை காணத் தவறாதீர்கள்.

 

ஈழத்தமிழர்களை வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கி அழிக்கும் செயல் திட்டத்திற்கு,காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சியை அமைக்கு சிங்கள கட்சிகளும், சிங்களத் தலைவர்களும் வேற்றுமையில் ஒற்றுமை காணுவதைநாம் தெளிவாக அவதானிக்க  கூடியதாகவுள்ளது. பிரித்தானிய ஆட்சியாளரிடமிருந்து, 1948ம் ஆண்டு இலங்கைதீவு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, ஈழத்தமிழர்களது அரசியல் சமூக பொருளாதார காலச்சார அந்தஸ்துக்களை ஆராய்வோமானால்,எமக்கு கிடைக்கும் பதில் பூச்சியமேஎன்பதை ஆழ்ந்த கவலையுடன் கூறிக்கொள்கிறேன்.

 

சிறிலங்காவின் சர்வதேச வெற்றி

 

முன்பு இலங்கைதீவிற்குள் மட்டுமே ஈழதமிழர்களுக்கு தொல்லையாக இருந்த சிறிலங்காவின் ஆட்சியாளர்கள், இன்று தமது அடக்கு முறைகளை, சர்வதேசம் வரை வியாபித்து விட்டனர். அதனால் அவர்கள் சர்வதேசத்தில் பல வெற்றிகளை தினமும் பெற்று கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடனே வாழ்கிறார்கள்.

 

இவை யாவற்றையும் மிக சுருக்கமாக கூறுவதனால், இலங்கைதீவில் பரந்து வாழ்ந்த ஈழதமிழர்கள், சிங்களத் தலைவர்களின் வேறுபட்ட சூழ்ச்சிகள்,சதிகளுக்குள் ஆகப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

 

ஆரம்பத்தில், அதாவது தெற்கில் கதிர்காமம், மாத்றை, காலி, போன்ற இடங்களிலிருந்து  சிங்களவர்களினால் விரட்டி கலைக்கப்பட்ட தமிழன், இன்று,தமது தயாக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனாதைகளாகவும்,அகதிகளாகவும், இடம்பெயர்ந்தோராகவும், உடமைகள் உடன் பிறப்புக்களை இழந்து,தமது எதிர்காலம் என்னவென தெரியாது காணப்படுகின்றனர்.

 

ஈழத்தமிழர்களின் இவ் அவல நிலையைசமூக நோக்கு, இனபற்று, பொதுநலம் கொண்ட ஒவ்வொரு தமிழனும் சிந்திப்பதுடன் நிற்காது, நிட்சயம் உணர்வுடன் ஒன்றுபட்டு செயற்பாட வேண்டும். ஆனால் சுயநலம் கொண்டவர்கள்,ஒற்றுமைக்கு அப்பால் சென்று, ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளிலேயே முன்னிற்கிறார்கள் என்பதே உண்மை.

 

யாரும் ஒற்றுமையை குழப்புவதற்கு முன்னிற்கிறர்களனால், அவர்களுடன் சுயநலம் நிறைந்த பல செயற்பாடுகளும் இணைந்து நிற்கும். தமது முக்கியத்துவம்,தமது பதவி அந்தஸ்து, தமது ஆலோசனைகள் ஆகியவை மற்றவர்கள் ஒற்றுமைபடுவதலினால் எவ்வளவு தூரம் தமக்கு பாதிக்கப்படும் என்பவற்றிற்கே சுயநலவாதிகள் முன்னுரிமை கொடுப்பார்கள்.

 

ஒற்றுமையினால் தமது இனத்திற்கு, தமது மக்களிற்கு, தமது மொழி கலை கலாச்சாரத்திற்கு, தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்படவுள்ள பாரீய நன்மைகள் பற்றி இவர்கள் அறவே சிந்திக்க மாட்டார்கள். என்னவெனில்,இவர்களது சிந்திக்கும் தன்மையை, சுயநலம் மறைத்துவிடுகிறது.

எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்

 

இவ் சுயநலவாதிகள், ஒற்றுமையை குழப்புவதற்காக, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள். எங்கெல்லாம் ஒற்றுமையை குழப்ப கூடிய விடயங்கள் தென்படுகிறதோ, அவற்றை எல்லாம் நன்றாக சேகரித்து, முடியுமானால் இன்னும் சிலவற்றை மிகைபடுத்தி, சரித்திரத்திலேயே ஒற்றுமை ஏற்படாது தமது சுயநலத்தை காப்பாற்றுவார்கள்.

 

இவ்வளவு மோசமான சுவாகம் கொண்ட நபர்கள், எவரையும் ஒற்றுமையாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

 

ஓற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற பல விடயங்களை தொடர்ந்து எழுதி உரையாடி திகிலடைந்து  போனதுடன், எனக்கும் ஏற்பட்ட சுகயீனம்காரணமாக, கடந்த இரு வருடங்களிற்கு மேலாக, சில குறிப்பிட்ட செயற்பாடுகளுடன், நடப்பவற்றை மிகவும் அவதானமாக கவனித்து வந்தேன்.

 

இவ்வேளையில், தமிழீழ விடுதலை புலிகளின், மகளீர் பிரிவின் அரசியல் தலைவி,தமிழினி (திருமதி சிவகாமி ஜெயக்குமார்) நீண்ட சுகயீனம் காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும், நாம் வாழும் பிரான்ஸ் நாட்டிலும், தமிழினியின் ஞாபகார்த் கூட்டங்கள் நடைபெற்றன. தமிழினியை நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நன்றாக தெரிந்த காரணத்தினால், தமிழினியின் நினைவு கூட்டங்களில் பங்கு கொண்டேன்.

 

இவ் நினைவு கூட்டங்களில் பங்கு கொண்டதன் மூலம், ஒற்றுமைக்கு யார் யார் குந்தகமாக உள்ளார்கள் என்பதை என்னால் நன்றாக அவதானிக்க முடிந்தது. ஓர் இடத்தில் ஒற்றுமை பற்றி வெளிபடையாக பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது,ஒற்றுமையின்மையில் மிக நீண்ட காலமாக குளீர்காயும் சில சுயநலவாதிகள் பெருமுச்சுடன் சகித்து கொண்டார்கள்.

 

அங்கு, உரையாற்றிய ஒருவர், தனது மனப்பூர்வமான பொது வேண்டுகோளை வெளிப்படையாக, “விடுதலைக்கு ஆயராது உழைத்த போராளிகளை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்களெனமுன்வைத்தார். வேடிக்கை என்னவெனில், நினைவு கூட்டம் முடிந்ததும், ஒற்றுமையின்மையில் குளீர்காயும் ஒருவர், ஒடி சென்று,உரையாற்றியவரிடம், “நல்லாய் கொடுத்தீர்களெனகூறுவதை காதால் கேட்டு கண்ணால் கண்டதும், மிகவும் மனவேதனை அடைந்தேன். உரையாற்றியவர் யாரையும் புண்படுத்து நோக்குடன் அக் கருத்தை முன் வைக்கவில்லை. ஆனால் இக் கருத்தை பெரிதாக ஊதி பெருப்பிப்பவர்கள் ஒற்றுமையை விரும்புபவர்களா?

 

குறுக்கு விசாரணை

 

இன்னுமொரு சந்தர்ப்பத்தில், தமிழினியின் ஓர் நிகழ்விற்கு செல்வதற்காக தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்தேன். அவ்வேளையில், ஓர் நபர்,

 

வணக்கம், நிகழ்விற்கோ போகிறீர்கள் என்றார்? ஓம் என்று கூறினேன்.

அன்று அந்த நிகழ்விற்கும் சென்றீர்களோ என்றார்? ஓம் என்றேன்.

 

உங்களை யார் அங்கு அழைத்தது என்றார்? இது உமக்கு தேவையில்லாத வேலை என்றேன். நான் எங்கும் போவேன், நீங்கள் இந்த விடயங்களில் தலையிடுவதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என வினாவினேன்.

 

நீங்கள் ………னுடைய கொள்கையை ஏற்கிறீர்களோ என்றார்? எனக்கு இவரை பார்க்க சிரிப்பு ஏற்பட்டது. காரணம்>  2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி ஏற்பட்ட சூறாவளி பற்றியோ> தற்கு பயந்து ஒழித்து திரிந்தவர்கள் பற்றியோ> அல்லது அதற்கு நின்றுபிடித்தவர்கள் பற்றியோ ஓன்றுமே அறியாதவராக உள்ள நபரிடம்>உமக்கு ……..னுடைய சரித்திரம் தெரியுமோ என்றேன்? உரியவர்களிடம் சரித்திரத்தை கேட்டு சரியாக அறிந்து கொள்ளுங்கள்’’  என்றேன். இதை தான் சொல்வார்கள் கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொண்ட கதையென்று!

 

இப்படியாக சில சம்பாசனைகள். இதற்கிடையில் தம்பியாக்களை தூண்டும் நபர்ஒருவர், மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் பொழுதே> ஒரு நடை மாகாநாட்டை கூட்டியிருந்தார். தம்பியாக்கள் என்ற பதத்தை இறுமாப்புடன் கூறுபவர்> தன்னை ஓர் முக்கிய ஸ்தானத்திலும்> தம்பியாக்ககளை சீடர் ஸ்தானத்திலும் வைக்கிறார் என்பதே உண்மை.

 

இவர்கள் எல்லாம் உண்மையில் ஒற்றுமையை விரும்புபவர்களா?

 

சிலரது நடவடிக்கைகளை பார்த்து வெட்கப்பட வேண்டியுள்ளது! மற்றவர்களை எட்ட வைக்க வேண்டும் என்பதில் கடுமையா உழைத்து கொண்டிருக்கிறார்கள். காரணம்,தமது முக்கியத்துவம், தமது பதவி அந்தஸ்து, தமது ஆலோசனைகள் போன்றவை மற்றவர்களின் வரவினால் பாதிக்கப்படுமா என்ற கவலை இவர்களை குடிகொண்டுள்ளது.

 

முப்பது வருடகால ஆயுத போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவோர்களும், திருமணம் செய்வதாக சத்தியம் கொடுத்து பெண்களை ஏமாற்றியவர்களும், மற்றவர் கதைகளில் லாபம் தேடுபவர்களும்,கொடுக்கல் வாங்கலில் நேர்மையற்றவர்களும், குடும்ப வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபடுபட்டவர்களும், சைவ சமய வெறி காரணமாக வன்னியில் கிறீஸ்தவ தேவலயத்திற்கு தீ வைத்து கொழுத்தியவர்களும்> மனித நேய மனிதஉரிமை செயற்பாட்டாளரென தமக்கு தாமே பெயர் சூட்டுபவர்களும்> சதி சமய பேதம் பார்ப்பவர்களும், விடுதலை போராட்டம் பற்றிய செய்திகள் கட்டுரைகளையாரும் தங்கள் வீட்டில் வாசிக்கப்படாதென கட்டளையிட்டவர்களும், தகமைக்கு மிஞ்சிய பொறுப்புக்களை கொண்டவர்களும், மொட்டை கடிதங்களை கவிதையாகஎழுதி ஊடகவியலாளரானவர்களும், புலனாய்வு நிறுவனங்களிற்கு தகவல்கள் சேர்ப்பவர்களும், மூன்று தசாப்தங்களிற்கு மேலாக ஒதுங்கியிருந்தி விடுதலை போராட்டத்தை கொச்சைபடுத்தியவர்களும், பிரிவுகளில் நன்றாககுளீர்காய்பவர்களும்> எப்படியாக ஒற்றுமையையும் மற்றவர்களின் வரவையும்விரும்புவார்கள்?

 

விசேடமாக, இவர்களது பழக்க வழக்கங்கள், பலவீனங்களை நன்றாக தெரிந்தவர்கள் உள்வாங்கப்பட்டால், தங்கள் நிலை என்னவாவது என்ற சிந்தனை இவர்களை குடிகொண்டுள்ளது.

 

முப்பது வருடங்களாக விடுதலை போராளிகளின் வெற்றிகளில் குளீர்காய்ந்து,பெரும் நிதியை திரட்டியவர்கள், தற்பொழுது போராளிகளை கொச்சைபடுத்த முனைவதை யார் ஏற்பார்கள்?

 

தலைவர் பிரபாகரன்

 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிலும், தலைவர் பிரபாகரனில் விசுவாசம் கொண்ட எவரும் ஒரு பொழுதும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள். ஊதரணத்திற்கு, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு பல தீங்குகள், தடைகள் மட்டுமல்லாது, சில போராளிகளின் வீரச்சவிற்கு காரணமாக இருந்த பல குழுக்களிற்கு, தலைவர் பிரபாகரன் மன்னிப்பு கொடுத்து ஒற்றுமையாக ஒன்றிணைத்து சிங்கள தேசத்தை எதிர்கொண்டார்.

 

அது மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான போராளிகளை மட்டுமல்லாது, பொது மக்களையும் படுகொலை செய்து அவர்களது சொத்துக்களை நாசம் செய்த சிறிலங்கா அரசுடன், தலைவர் பிரபாரகன், உடன்படிக்கைகள் செய்து பேச்சுவார்த்தைகளும் நடத்தினர் என்பது சரித்திரம்.

 

ஆனால் இன்று புலம்பெயர் வாழ்வில் நடப்பவையோ மிகவும் வேடிக்கையான விடயங்கள். தமிழீழ கொள்கையையும்> தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும் சார்ந்தவர்களிடையே ஒற்றுமையின்மை காண்பதற்கு> வர்களுடன் இணைந்து உறவாடும் மேலே  கூறப்பட்ட சுயநலவாதிகளே காரணம்.

 

ஒற்றுமையில் விசுவாசம் கொண்ட எவரும், பிரிவினைகளை பலப்படுத்தும் வேலைகளான கதைகாவுதல், கோள் சொல்தல், வீம்பிற்கு பிழைகாணுதல்,இருவரை பிரித்து வைக்கும் வேலை திட்டம், ஒட்டு கேட்டல்  போன்றவற்றை முன்னின்று செய்யமாட்டார்கள்.

 

ஓற்றுமையை விரும்பியவர்கள், தமக்கு கொடுத்த வேலைகளில் மட்டுமே கரிசனையாக இருப்பார்கள்.

 

குழுக்கள், சங்கங்கள்

 

முன்பு ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக நடந்த வேளையில் தமிழீழ மக்கள் ஆயிரம் ஆயிரமாக இணைந்து போராடி, சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழ பிரேதசத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.  தூர்அதிஸ்டவசமாக தமிழீழத்தின் முழுபிரேதசங்களை கைப்பற்ற முடியவில்லை.

 

ஆனால் இன்று புலம்பெயர் தேசத்தில் சிறு சிறு குழுக்களாகவும், சங்கங்களாகவும் ஒற்றுமையின்றி பிரிந்து நின்று, நாம் எதை வென்றெடுக்கப் போகிறோம்?யாரையும் ஒன்றாக ஒற்றுமையாக இணையவிடாது, நந்திபோல் நடுவில் நின்று,தமது சுயநலங்களை நிவர்த்தி செய்யும் கோடாரீ காம்புகள்இதை உணருவார்களா?

 

நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையின்றி பயணிக்கின்றோமோ, அவ்வளவு தூரம் எமது தமிழீழ பிரதேசம், எமது மொழிகலை கலாச்சாரம் போன்றவற்றை தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளரிடம் இழப்போம். இறுதியில், எமது அடையாளங்கள் யாவும் இலங்ககைதீவில் நிர்மூலமாக்கப்பட்டு, தேசம் என்ற அந்தஸ்தை இழந்து,சிறுபான்மை நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் சிறுபான்மை என்ற அந்தஸ்தையும் இழந்து, சிங்களவர் என்ற அந்தஸ்தை எமது வருங்கால சந்ததியினர் பெற்று கொள்வதற்கு சுயநலவாதிகள் வழிகோலுகிறார்கள்.

 

இதை மிக சுருக்கமாக கூறுவதனால், ஓற்றுமையை விரும்பாத கோடாரீ காம்புகள், சிங்கள அரசினதும், வெளிநாட்டு புலனாய்வுகளது திட்டங்களிற்கு துணை போகிறார்கள் என்பதே உண்மை.

 

எம்முடன் பழகுபவர்கள், கதைப்பவர்களில் எந்தனை பேர் ஒற்றுமையை விரும்புகிறார்கள்? இதை, சிலருடனா  சம்பாசனையிலிருந்து மிக இலகுவாக புரிந்து கொள்ள முடியும். பிரிவினைகளை மிகைபடுத்துவார்கள், ஓர் பக்கம் சார்ந்து மற்றைய பக்கத்தையோ, பக்கங்களையோ பிழைபிடிப்பதுடன், அதை  கேலி பண்ணுவார்கள். தம்மால் மிகைப்படுத்தப்பட்ட கதைகளை ஏற்றுகொள்ளுமாறு பரப்புரையும் செய்கிறார்கள்.

 

மறைந்த மாவீரர்களிற்கும், விடுதலை போராட்டத்திற்கும், ஆறு தசாப்தங்களாக நடைபெற்று வரும் உரிமை போராட்டத்திற்கு இவர்களால் செய்யப்படும் அர்பணிப்பு இதுவா?

 கோடாரீ காம்புகள்

 

நாங்கள் வெளிநாட்டுக்கு வந்துவிட்டோம், வாழும் நாட்டில் தேசியம் பெற்றோமோ இல்லையோ, இங்கு எமக்கோ, எமது குடும்பத்தினருக்கோ என்ன குறையுள்ளது என்பதை மட்டுமே சிந்திப்பவர்கள் தான் இவ் சுயநலவாதிகள். தமதுசுயநலத்திற்காகவும், சில்லறை வியாபாரத்திற்காகவும் ஒற்றுமையை குழப்புவது இவர்களுக்கு ஓர் சஞ்சலமான விடயமல்லா.

 

சகல பக்கங்களிலும் பிரிவுகளிலும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பவர்கள் உள்ள காரணத்தினால், சிரமங்களின் மத்தியில், குழுக்களாகவும் சங்கங்களாகவும் சில தார்மீக கடமைகளை மேற்கொள்வோர், முதலில் தம்மிடையே உள்ள கோடாரீ காம்புகள்  யார் என்பதை அடையாளம் காண வேண்டும்.

 

அடுத்து, இப்படியான கோடாரீ காம்புகள் தொடர்ந்து ஒற்றுமைக்கு இடையுறான நடவடிக்கைகள், செயற்பாடுகள், கதைகள் பேச்சுக்களை செய்யாது உடன்நிறுத்துமாறு வேண்டுகோள் முன் வைக்க வேண்டும்.

 

இவ் வழிமுறையை,  குழுக்களும் சங்கங்களும் செய்வதற்கு முன்வருவார்களேயானால், அன்றிலிருந்து புலம் பெயர் தேசங்களில் ஒற்றுமை தானாக வந்து சேரும். ஒற்றுமையை விரும்பாதோர், உபத்திரவம் கொடுக்காது ஓதுங்கி வாழ்வது விரும்பதக்கது.

 

இதனை தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் மீதான எமது வேலை திட்டங்களை மிகவும் இலகுவாக நகர்த்த முடியும். ஒற்றுமைக்காக குரல் கொடுப்பது சுயநலமற்ற ஒவ்வொரு தமிழனின், விசேடமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களது கடமையாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit