சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் 22 ஆவது ஒளிவிழா

பிறப்பு : - இறப்பு :

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பேர்ண் கிளை நடாத்தும் ஒளிவிழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் – பிரெம்கார்ட்டன் நகரில் உள்ள தேவாலய மண்டபத்தில் நடைபெறும். சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிதாஸ் டலிம்மா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கத்தேலிக்க ஆன்மீக பாடசாலை மாணவ மாணவியர் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும், ஆசிரிய ஆசிரியைகள் பங்கு கொள்ளும் தேவ கீதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

22 ஆவது வருடமாக நடைபெற்றுவரும் இந்த ஒளிவிழா ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து தங்கு தடையின்றி ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

OLIVILA BERN

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit