224 பேரின் உயிரை எடுத்த விமான தாக்குதல்… ஆதார காட்சியை வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற மெட்ரோஜெட் ஏர்லைன்ஸ் விமானம் (ஏ–321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. அதன் சிதைவுகள் அல் ஹசானாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் கூண்டோடு உயிரிழந்தனர்.

இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்தது. ஆனால் ரஷ்யாவோ, ஐ.எஸ். அமைப்பிடம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் கிடையாது என்று திட்டவட்டமாக கூறி வந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பு, விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மெட்ரோஜெட் விமான நிறுவனத்தின் துணை பொது இயக்குனர் அலெக்சாண்டர் சிர்மனோவ், இந்த விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறோ விமானியின் தவறோ காரணமில்லை என்றும் வெளிப்புறத் தாக்குதல் மட்டுமே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ள நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ உண்மையானதாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*