ஒப்பந்தங்கள், உறுதி மொழிகளை சிறிலங்கா மதிப்பதில்லை !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த ஓக்டொபர் 1ம் திகதி சிறிலங்கா மீதான ஐ.நா. மனித உரிமை சபையின் பிரேரணை (A/HRC/30/L.29) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இவ் பிரேரணை ‘ஏகமனதாக’, அதாவது எந்த எதிர்ப்பும் இல்லாது நிறைவேற்றப்பட்டது என்பதை, 30வது கூட்டத் தொடரின் சிறிலங்கா பற்றிய சகல கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவன் என்ற வகையில், ‘ஏகமனதாக’ என்ற கூற்றை நிட்சயமாக ஏற்க மறுக்கிறேன்.

உண்மையை கூறுவதனால், இவ் பிரேரணை என்பது, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கோ அல்லது சிறிலங்கா அரசிற்கோ ஒரு வெற்றி அல்லா. நிட்சயமாக சிறிலங்காவின் நிலைமைகளில் கழுகு பார்வை கொண்ட அமெரிக்கா, இந்தியாவிற்கு இது ஓர் மாபெரும் வெற்றி என்பதே உண்மை.

கடந்த ஐ.நா.மனித உரிமை சபை கூட்டத் தொடரில், சிறிலங்கா சம்பந்தப்பட்ட சில கூட்டங்களில் – சீனா, பாகிஸ்தான், ராஸ்யா, கியூபா ஆகிய நாடுகளின் கருத்துக்களை மிகவும் கவனமாக அவதானித்த எவரும், சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓர் ‘ஏகமனதானது’ என கூற மாட்டார்கள்.

இவ் தீர்மானத்தை பொறுத்தவரையில் ஒன்று மட்டும் நிட்சயம் தெளிவாகியுள்ளது. அதாவது, இவ் தீர்மானம் பற்றி வீரம் பேசி எதிர்ப்புக்கள் காண்பித்த சிறிலங்கா, இறுதியில் இப் பிரேரணையின் 90% அம்சங்களில் எந்தவித மாற்றங்களுமின்றி, தமிழீழ விடுதலை புலிகள் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டுமென கூறும் ஓர் புதிய பந்தி உள்ளடக்கப்பட்டதுன், இப்பிரேரணையை சிபார்சு செய்யும் நாடுகளின் ஒன்றாக சிறிலங்கா மாற்றப்பட்டதன் பின்னணியில், அமெரிக்கா வல்லாதிக்கத்தின் பலத்தை நாம் தெளிவாக காண முடிகிறது.

எனது இருபந்தைந்து வருடகால ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளில், இதுவே முதல் தடவையாக, ஓர் நாட்டிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, உரிய நாடும் இணைந்து, அவ் தீர்மானத்தை சிபார்சு செய்ததை கண்டுள்ளேன். இதை மிக சுருக்கமாக கூறுவதனால், சர்வதேச நிலையில் மிக ஆபாயமான நிலை உருவாகுவதை அவதானித்த சிறிலங்கா, தனது புத்தி யுக்திகளை பாவித்து, ‘தலையுடன் போக இருந்ததை, தலைபாகையுடன்’ காப்பாற்றியுள்ளார்கள் என்பதே உண்மை.

எது என்னவானாலும், தீர்மானத்தை இணைந்து சிபார்சு செய்து ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் தற்போதைய செயற்பாடுகள், இரு சந்தேகங்களை உருவாக்குகின்றன. ஒன்று, தாம் இவ் தீர்மானத்தை முற்று முழுதாக செயற்பாடுத்த வேண்டியதில்லை. இரண்டாவதாக, தீர்மானத்தின் மூல நாடுகளனான, அமெரிக்கா, பிரித்தானிய, இந்தியா ஆகிய நாடுகள், தீர்மானத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை போன்ற ரகசிய புரிந்துணர்வுகளை கொண்டிருக்கலாம். இவற்றின் உண்மை தன்மைகளை, இவ் தீர்மானத்தை கண் காணித்து வரும், ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் 34வது கூட்ட தொடரில் (2017ம் ஆண்டு மார்ச் மாதம்); வெளியாக இருக்கும் அறிக்கை மூலம் நாம் யாவரும் அறியமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையில் முழு நம்பிக்கையை வைத்து நீதியை எதிர்பார்க்கும் உலகம் பூராக உள்ள பாதிக்கப்பட்ட மக்களிற்காக மனம் வருந்துகிறேன். காரணம், அவர்களால் அறிந்து கொள்ள முடியாத உண்மை என்னவெனில், ஐ. நா.வில், மனித உரிமை சபை உட்பட சில நிறுவனங்கள், முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை. கடந்த கூட்டத் தொடரில், சிறிலங்கா மீதான தீர்மானம் பற்றி விவாதித்த வேளையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இவற்றை வெளிப்படையாக கூறியிருந்தன. இவ் நாடுகள் எம்மை விட வேறுபட்ட நிலையில் கூறியிருந்தாலும், மனித உரிமை சபை அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை.

இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய விடயத்தில், எமது முக்கிய கரிசனை என்னவெனில் – கடந்த ஆறு தசாப்தங்களிற்கு மேலாக, தமிழீழ மக்கள் சார்பாக எந்தவொரு விடயத்தை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியவர்கள், மாவீல் ஆறு நீர் பிரச்சனையின் குற்றவாளிகள், ஒஸ்லோ பிரகடனத்தை மீறியவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளை தமிழர்கள் மீது சுமத்தி, சர்வதேச பரப்புரை செய்து, வெற்றியும் கண்டுள்ள சிறிலங்கா ஆட்சியாளர்களை, ஐ.நா.மனித உரிமை சபையில் எந்தவித வெற்றியையும் பெற்றுகொள்ள அனுமதிக்காது விடயங்களை நகர்த்த வேண்டும் என்பதே.

மீறப்பட்ட ஓப்பந்தங்கள்

இவ் அடிப்படையில், முன்னைய உறுதிமொழிகள், ஒப்பந்தங்களை மதிக்காத சிறிலங்கா அரசு, நிட்சயம் இவ் ஐ.நா. தீர்மானத்தையும் மதிக்காது என்பதனை நாம் அறிவோம். ஆகையால் இதை நாம் உலகிற்கு நிருபித்து காட்டுவதற்கு எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பதை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது எமது கடமை. இவ் அணுகுமுறையை, ஒன்றும் புரியாது, ஐ.நா.வில் வலம் வருபவர்களால் விளங்கி கொள்ள முடியாது.

இவ் அணுகுமுறைக்கு அமைய, சரித்திரத்தில் முதல் தடவையாக, ‘பந்து’ சிறிலங்காவின் பக்கம் நகர்த்தப்பட்டுள்ளது. இன்று சிறிலங்காவின் நிலை உலகில் மிகவும் கேளிக்கை நிறைந்து காணப்படுகிறது. பாரளுமன்றத்தில் குழப்பம், ஊர்வலங்கள், நாடு பூரான ஐ.நா.தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்ககைகள் என பட்டியல் நீள்கிறது. இன்று சிறிலங்காவில் உள்ள ‘தேசிய அரசாங்கம்’ எவ்வேளையிலும் சர்ச்சைக்குள்ளாக கூடிய நிலை காணப்படுகிறது.

இவ் நிலையில், மனபூர்வமாக விரும்பாத ஓர் ஐ.நா. தீர்மானத்தை, சிறிலங்கா அரசினால் எப்டியாக நடைமுறை செய்ய முடியும்? தொடர்ந்து ‘ஈழத் தமிழர்’ குற்றவாளி கூண்டில் நிற்பது என்பது இனிமேலும் ஏற்க முடியாத விடயமாகும்.

எமது சரித்திரத்தில், 1957ம் ஆண்டு முதல், இன்று வரை பல வாக்குறுதிகளையும், ஓப்பத்தங்களையும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீறியுள்ளதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி, முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்காவின் தகப்பனார், பிரதமர் திரு எஸ் டபிள்யு ஆர் டி பண்டரநாயக்காவிற்கும், தமிழ் அரசியல் தலைவர் திரு எஸ் ஜே வி செல்வாநாயகத்திற்கும் இடையில், தமிழர்களது தயாகபூமியான வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி ஆட்சி வழங்குவதாற்கான ஓர் உடன்படிக்கை (செல்வ-பண்டா ஒப்பந்தம்) கைச்சாத்திடப்பட்டது. சிங்கள மக்கள், புத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக, இவ் உடன்படிக்கை, நடைமுறை படுத்தப்படாது கைவிடப்பட்டது.

1965ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி, முன்னாள் பிரதமர் திரு டட்ளி சேனநாயக்கவிற்கும், தமிழ் அரசியல் தலைவர் திரு எஸ் ஜே வி செல்வாநாயகத்திற்கும் இடையில், தமிழர்களது தயாக பூமியான வடக்கு கிழக்கிற்கு அரசியல் பகிர்வு வழங்குவதாற்கான உடன்படிக்கை (செல்வ-டட்ளி) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதுவும் செல்வ-பண்டா ஒப்பந்தம் போல் நடைமுறைப்படுத்தப்படாது கைவிடப்பட்டது.

1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி, இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்குமிடையில் ஓர் ஓப்பந்தம், இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக கூறி கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமே 13வது திருத்தச் சட்டத்திற்கு வழிவகுத்தது. ஆனால் இவ் 13வது திருத்தச் சட்டம் இன்று ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகியும் முற்று முழுதாக நடை முறைப்படுத்தப்படாதாது மட்டுமல்லாது, இவ் உடன்படிக்கை மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள், சிங்கள அரசியல் தலைவர்களின் சூழ்சியினால், நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஓர் சிங்களத் தலைவர் வடக்கு கிழக்கு பிரிவினை பற்றி கருத்து கூறுகையில், தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பட்டு பிரதேசத்தை கிழக்கிற்கும் வியபிக்காது தடுப்பதற்காக, இதனை ஓர் வெளிநாடு, ஜே.வி.பி.யை பாவித்து முன்னின்று செய்வித்ததாக கூறியுள்ளார்.

1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி, ஜனதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்காவினால் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று, தமிழீழ விடுதலை புலிகளினுடைய தலைவர் பிரபாகரனுடன் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இவ் உடன்படிக்கைக்கு இணங்க, தமிழீழ பிரதேசங்களிற்கு அமுலிருந்த பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும். ஆனால் இவ் உடன்படிக்கை கைச்த்திட்டு ஓர் சில மாதங்களின் பின்னர், ஜனதிபதி சந்திரிக்கா தமிழீழ பிரதேசங்களில் பொருளாதார தடை என்று ஒன்று அங்கு இல்லையென்று விவாதித்ததுடன், வேறு சில சட்டுபோக்குகளை கூறியதுடன், யுத்தம் மீண்டும் ஆரம்பமாகியது.

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி, நோர்வே நாட்டின் அனுசரணையுடன், சிறிலங்காவின் பிரதமரான திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கும் இடையில் ஒர் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இவ்வுடன்படிக்கையை தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் – தாய்லாந்து, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில், தமிழீழ விடுதலை புலிகளிற்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் இடம்பெற்ற பொழுதும், இவ் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட விடயங்களை சிறிலங்கா அரசு நடைமுறைபடுத்த முன்வரவில்லை!

இதே இடத்தில் அவ்வேளயில் ஜனதிபதி சந்திரிக்கா இவ்வுடன்படிக்கையை முற்று முழுதாக ஏற்க மறுத்ததுடன், சரியாக இரு வருடங்களின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசை கலைத்து, விடுதலைப் புலிகளிற்கு எதிராக, மகிந்த ராஜபக்சாவை பிரதமராக கொண்ட ஓர் அரசை உருவாக்கினார். அன்றிலிருந்து சகல விடயங்களிலும் தமிழீழ பகுதிகளின் ஓரம் கட்ட ஆரம்பித்ததுடன், 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி, சிறிலங்கா அரசு தாம் இவ் உடன்படிக்கையிலிருந்து வாபஸ்பெறுவதாக, உத்தியோகபூவமாக நோர்வே அரசிற்கு அறிவித்திருந்தது.

இதேவேளை தமிழீழ பிரதேசங்கள், சுனாமியினால் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சுனாமியில் ஏற்பட்ட பாதிப்புக்களை மீழ் கட்டுமானம் செய்வதற்கா :

2005ம் ஆண்டு யூன் மாதம் 24ம் திகதி, ஓர் சுனாமி மீழ் கட்டுமான ஒப்பந்தம், சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலை புலிகளிற்கும் இடையில் கைச்சாத்தகியிருந்தது. இவ் ஒப்பந்தத்தையும், வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு பாவித்த அதே தந்திரத்தை பாவித்து, 2005ம் ஆண்டு யூலை மாதம் 15ம் திகதி, ஓர் நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க கைவிடப்பட்டது.

இப்படியாக வாக்குறுதிகளையும், ஒப்பத்தங்களையும் மாதிக்காது தந்திரமாக தப்பிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, கடந்த ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முற்று முழுதாக நடைமுறை படுத்துவார்களென, சர்வதேசம் பகற்கானவு காணுகிறது!

தமிழீழ மக்களது அரசியல், பொருளாதார விடயங்களில், மிதவாத போக்கை கொண்ட சில சிங்களத் தலைவர்கள் உள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்களால், இனத்துவேசம் கொண்ட பெரும்பான்மை சிங்களவர்களை சமாளிக்க முடியாது என்பதே உண்மை.

யுத்த குற்றவாளிகள்

தற்பொழுது சிறிலங்காவில், விசேடமாக தெற்கின் மூலை முடுக்கு எல்லாம் காணப்படும் முக்கிய கேள்வி என்னவெனில், ‘எமது நாட்டினை துண்டுபோட எண்ணிய தமிழ் பயங்கரவாதிகளை தோற்கடித்த’ எமது செல்வங்களான, படை வீரார்களை எப்படி ஓர் அரசு விசாரிக்கவோ, தண்டணை கொடுக்வோ முடியும்? என்பதே. இவர்கள் உலக சரித்திரத்தை அறிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது.

ஐ.நா. தீர்மானத்தை தொடர்ந்து சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை நாம் கவனிக்குமிடத்து – இவர்கள் ஜெனிவாவில் இருக்கும் பொழுது, ‘பொதுநாலவாயம் மற்றைய நாடுகளை உள்ளடக்கிய நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், வழங்கறிஞர்களை கொண்ட விசாரணை என்பார்கள்’. ஜெனிவாவிலிருந்து கொழும்பிற்கு விமானத்தில் ஏறியதும், “ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் சரியாக ஆராய்ந்து கருத்து கூறுவோம் என்பார்கள்’. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்ததும், ‘உள்நாட்டு விசாரணை என்பார்கள்’.

இந்த தீர்மானம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அளுத்தம் திருத்தமான நீதியை கொடுக்க முடியாது என தெரிந்து கொண்ட பொழுதிலும், இப்படியாக இவர்கள் கதைப்பார்கள், செய்வார்கள் என்பதற்காகவே, எம்மில் பலர் இவ் தீர்மானத்தை ஆதரிக்க முன் வந்துள்ளோம். காரணம் சர்வதேசங்களின் முன், சரித்தித்தில் முதல் தடவையாக ‘பந்து’ சிறிலங்காவின் பக்கம் மிகவும் சாதுர்த்தியமாக நகர்த்தப்பட்டுள்ளது.

பொதுநலவாயம்!

இதில் ஓர் முக்கிய குறிப்பு என்னவெனில், இந்த தீர்மானம் பொதுநாலவாய நாடுகள் மட்டுமென கூறப்படவில்லை. “பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கு தொடுனர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள்” என்றே தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பொதுநாலவாயம் என்பதை சிலர் மிகவும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. காரணம், அண்மையில் வெளியான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையின் முக்கிய பங்கு வகித்த முக்கியமான மூவரில், இருவர் பொதுநாலவாய நாடுகளை சார்ந்தவர்களே – நியூசிலாந்தை சார்ந்த உயர்நீதிபதி திருமதி சில்வியா கற்றயிற் மற்றும் பாகிஸ்தானை சார்ந்த வழங்கறிஞர் திருமதி அஸ்மா ஜங்கீர் என்பது குறிப்பிடதக்கது.

அடுத்து, சிறிலங்காவில் இடம்பெற்ற சில குறிப்பிட்ட படுகொலைகளை விசாரிப்பதற்காக, 2006ம் ஆண்டின் பிற்பகுதியில், சர்வதேச சுயதீன மாண்புமிக்கோர் குழு (International Independent Group of Eminent Persons – IIGEP) நியமிக்கப்பட்டது. இவர்கள் சிறிலங்கா மீது மிகவும் பரதூரமான பல சட்டதிட்டங்களுடனான குற்றச் சாட்டுக்களை, 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன் வைத்த பின்னர், சிறிலங்காவிலிருந்து வெளியேறினார்கள் என்பது சரித்திரம். இக் குழுவின் தலைவராக, இந்தியாவின் இளைபாறிய பிரதம நீதிபதி திரு ஜே. என். பகவதி கடமையாற்றிய அதேவேளை, அங்கு பொதுநாலவாய நாடுகளை சார்ந்த பல அங்கத்தவர்களும் கடமையாற்றயிருந்தார்கள். ஆகையால் இவ்விடயத்தில் யாரும் அதிருப்தி அடைவதற்கு நியாயமில்லை. காரணம் இவ் தீர்மானத்தின் செயற்பாட்டை, ஐ. நா. மனித உரிமையாளரின் காரியாலயமே கண்காணிப்துடன், இதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையையும், ஐ.நா. மனித உரிமை சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

சிங்கள அரசுகள்

சிறிலங்கா விடயத்தில், இன்றுவரை சர்வதேசம் ஒழுங்காக அறியாத உண்மை என்னவெனில், சிங்கள ஆட்சியாளர்கள் யாராகவிருந்தாலும், வடக்கு கிழக்கை தாயாகமாக கொண்ட தமிழீழ மக்களின் விடயத்தில், மிகவும் ஒற்றுமையான அடக்கு முறை கொள்கைகளையே கடைபிடித்து வருகிறார்கள் என்பதே. இதை எந்த ஒழிப்பு மறைப்புமின்றி, முன்னாள் ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா, 1983ம் ஆண்டு யூலை மாதம் 11ம் திகதி, பிரித்தானியாவில் வெளியாகும், ‘ரெலிகிறாப்’ என்ற பத்திரிகைக்கு மிகவும் தெளிவாக கீழ்வருமாறு கூறியிருந்தார். “என்னை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் அபிப்பிராயங்களை பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. தற்பொழுது நாங்கள் அவர்களது கருத்துக்களையோ உயிர்களை பற்றியோ யோசிக்க தேள்வையில்லை. எவ்வளவு அளுத்தங்களை வடக்கிற்கு கொடுக்க முடியுமோ, அது இங்குள்ள சிங்கள மக்களை மகிழ்விற்கும். உண்மையில் நான் தமிழ் மக்களை பட்டினியிட்டால், சிங்களவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.” (Daily Telegraph – 11 July 1983)

ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் இவ் கூற்றனாது, யுத்தத்தின் ஆரம்பத்தில், இரண்டு மூன்று, பத்து சிறிலங்கா படையினர் கொல்லப்பட்ட காலம். ஆனால் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில், சில தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்ட சம்பவங்களும் உண்டு. அப்படியானால், சிங்கள ஆட்சியாளர்களிடையே எப்படியான மாற்றங்களை உண்டுபண்ணியிருக்க முடியும்? இதேவேளை தமிழீழ மக்கள் மிது மிக மோசமான அடக்குமுறையுடனான கொலைகள், காணமல் போதல், கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், உடமைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது பேசப்படும் சமானதான அரசில் தீர்வுகள் சாத்வீகமானவையா? என்பதை நாம் ஒரு கணம் எண்ணி பார்க்க வேண்டும். இது உண்மையில் சாத்வீகமான விடயமானால், அவையாவும் கடந்த ஆறு வருடங்களிற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தற்பொழுது தீவிர சிங்களத் தலைவர்கள் மிகவும் தெளிவாக வெளிப்படையாக மிகவும் அளுத்தம் திருத்தமாக ‘சிங்களத் தீவு, சிங்கள அரசு’ பற்றியே பாரளுமன்றத்தில் உரையாற்றுகிறார்கள்.

தமிழ் மக்களின் சாத்வீக போராட்ட காலங்களில், வடக்கு கிழக்கு தவிர்ந்த் மற்றைய மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை வன்முறைகள் மூலம், தமிழர்கள் தாயாக பூமிக்கு அடித்து துரத்திய சிங்கள ஆட்சியாளர்கள், தற்பொழுது தமிழர்களின் தாயாக பூமியின் அரைபங்கை ஏற்கனவே விழுங்கி விட்டார்கள்.

இப்படியான சூழ் நிலையில், தமிழர்கள் சம உரிமை பெற்று சமஸ்டி ஆட்சி பெற்று சமாதானமாக இலங்கைதீவில் வாழ்வார்கள் என்பது நடக்க கூடிய காரியமா? இதற்காகவே ‘பந்து’ தற்பொழுது சிறிலங்காவில் பக்கம் நகர்தப்பட்டுள்ளது என்பதை, விதண்டாவாதம் பேசுபவர்களால் சிந்திக்க முடியாது. அவ்வளவிற்கு அவர்கள் பங்குவம் கொண்டவர்களும் அல்லா.

சமாதானம் சமத்துவம்

எமது முன்னோர்களினால், எமது அருமை தாய் மொழியான தமிழில், ‘சமாதானம், சமத்துவம்’ ஆகிய இரு சொற் பதங்களிற்கு மேலாக, வேறு சொற்கள் இனிமையான அரசியல் பதங்களாக இருக்க முடியாது. ஆனால் இவை யாவும் இலங்கைதீவில் நடைபெறக்கூடிய ஓர் விடயமாக தென்படுகிறதா?

யுத்தம் முடிந்த 2009ம் ஆண்டு மே மாதம் முதல், என்னால் பல கட்டுரைகள், 13வது திருத்தச் சட்டம் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஐ.நா.வின் இறுதி தீர்மானத்திலும் 13வது திருத்தச் சட்டம் பற்றி வலியுறுத்ப்பட்டுள்ளது. இவைபற்றி விரும்பினால் தொடர்ந்தும் எழுத முடியும். என்னால் முன்பு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை, சில சந்தர்ப்பவாதிகள் – திரிவு படுத்தி தங்களது அறிவிற்கு ஏற்ற வகையில் விளங்கங்களையும் கொடுத்துள்ளார்கள்.

என்னை பொறுத்தவரையில் 13வது திருத்தச் சட்டம் என்பது, ஒரு தரிப்பிடமே தவிர, தங்குமிடம் அல்லா. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பல தடவைகள், எமது லட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளை கையாளலாமென கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் லட்சியத்தில் உறுதி கொண்ட எவனும், மற்றுவழிகளை எண்ணி பார்பதில் என்ன தவறு?

இதற்கு ஓர் நல்ல ஊதராணமாக நாம் ஸ்கொத்லாந்தை பார்க்க முடியும். பிரித்தானியாவில் தொழில் கட்சியின் பிரதமர் 1994ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து, ஸ்கொத்லாந்திற்கு ஓர் பாரளுமன்றம் 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்காக ஸ்கொத்லாந்தின் தனி நாட்டு கோரிக்கை கைவிடப்படவில்லை. இறுதியில், கடந்த வருடம் 2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்கொத்லாந்து பிரிந்து செல்வதற்கான ஜனநாயக வாக்கெடுப்பு அங்கு நடைபெற்றது. இதில் வெற்றி தோல்வியின் கதை வேறு. அதற்காக இன்னுமொரு வாக்கெடுப்பு அங்கு இன்னும் சில வருடங்களில் நடைபெறது என்பது அர்த்தம் அல்லா.

ஆகையால், தற்காலிகாமாக ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள வேளையில், நாம் மாற்று வழிகளை, நாட்டில் வாழும் மக்களின் கஸ்ட்ட நஸ்டங்களை மனதில் கொண்டு பரீசிலீப்பதில் என்ன தவறு என்பதையே எனது கட்டுரைகளில் கூறினேன்.

கடந்த வரம், ஐ.நா.தீர்மானம் பற்றிய பாரளுமன்ற விவாதத்தில், சிங்கள தரப்பினாரினால் ஆற்றப்பட்ட உரைக்கு அமைய, தமிழீழ மக்களாகிய நாம், இரு விடயங்களில் ஒன்றிற்கு தயாராக இருக்க வேண்டுமா? ஓன்று இலங்கைதீவில் நாம் எமது இன, மொழி, கலாச்சாரத்தை மாற்றி முழு சிங்களவர்களாக வாழுவதற்கு தயாராக வேண்டும். இல்லையேல், சர்வதேசத்தின் உதவியுடன் நாம் எமது நாட்டை உருவாக்குவதற்கான வழிவகைகளை தேடவேண்டும். சர்வதேசத்தின் ஓர் அங்கமாக நாம் இந்தியாவை மனதில் கொள்ள வேண்டும்.

தற்போதைய ஐ.நா.தீர்மானம் சிறிலங்காவினால் சரியான முறையில் நடைமுறை படுத்த தயங்கும் சந்தர்ப்பத்தில் – தமிழ் சிங்கள இனத்தவர்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழுவதற்கு இரு இனங்களும் பிரிந்து வாழ்வதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை, தமிழீழ மக்களாகிய நாம் மட்டுமல்லாது, இவ் தீர்மானத்தின் மூலகர்த்தவாகிய – அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்று மற்றைய சர்வதேச நாடுகளும் சிந்திப்பதற்கு ஆரம்பிப்பார்கள்.

இறுதியாக நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடரில், நாட்டிலிருந்து வந்த பல மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களை பொறுத்தவரையில், நாட்டில் சிங்கள, தமிழ் மக்களிடையே எந்தவித புரிந்துணர்வோ சமாதானமோ இன்றி வாழுவாதாக வெளிப்படையா கூறினார்கள்.

இவ் உண்மையை சிங்கள தலைவர்கள் மட்டுமல்லாது, தமிழ் தலைவர்களும் நான்கு அறிவார்கள் ஆனால் இவற்றை வெளிப்படையாக கூறுவதற்கு தயாக்குகிறார்கள். அப்படியானால், 13வது திருத்தச் சட்டம், சமஸ்டி, சுயநிர்ணய உரிமை போன்ற வாசனங்களை நாம் தொடர்ந்தும் கதைப்பதில் ஏதும் பலன் உள்ளதா? என்பதை நாம் யாவரும் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும். இதே இடத்தில் ஏற்கனவே ஆறு தசாப்தங்களிற்கு மேலாக காலத்தை கடத்தியது மட்டுமல்லாது, எமது தாயாக பூமியின் அரை பகுதியையும் பறி கொடுத்துவிட்டோம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள்

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்றதினால் ஏற்பட்ட இடைவெளியை, சில புலம் பெயர்வாழ் தமிழர்கள் மிக நன்றாக பயன்படுத்தி, தமது சுயநலங்களை மனதில் கொண்டு செயற்படுகிறார்கள். இதில் ஒரு பகுதியினர், வெளிநாட்டு புலனாய்வுகளுடன் இணைந்து தமிழர்களின் நலன்களை தமது உழைப்பாக்கியுள்ளனர்.

அடுத்து, புலம் பெயர்வாழ் மக்களிடையே ஊர் பெயர் தெரியாது வாழ்ந்த சிலர் – தென் ஆபிரிக்கா, நோர்வே, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளிற்கு, தாமே புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளெனவும், பேச்சாளர்களெனவும் கற்பனை கதைகளை கூறி அவர்களை நம்ப வைத்துள்ளார்கள்.

புலம் பெயர் வாழ்வில் இன்னுமொரு பிரிவினருக்கு, தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களிற்கு முன்வராத ஆசைகள் எண்ணங்கள் இவர்கள் மனதில் முன்வர ஆரம்பித்தது. இதன் காரணமாக 2002ம் ஆண்டின் பிற்பகுதியில், ‘சமாதனத்திற்கான நோபல் பரிசிற்கு’ தம்மை சிபாரீசு செய்யுமாறு, விடுதலை போராட்டத்தின் மூல கர்த்தவாக அவ்வேளையில் விளக்கியவரிடம், வெட்கம் ரோசமின்றி முன்வைத்து, அதற்கான விளைவுகளையும் அனுபவித்தார்கள். தற்பொழுது மீண்டும், இவ் ‘சமாதனத்திற்கான நோபல் பரிசிற்கு’ தற்போதைய சிறிலங்கா அரசு தன்னும் சிபார்சு செய்ய வேண்டுமென எண்ணி, இரவு பகலாக தம்மைபற்றி அர்தமின்றி, பொய்களும் புரட்டுகளும் மிகைபடுத்திய சரித்திரங்களையும் கூறிவருகிறார்கள்.

புலம்பெயர் வாழ்வில், தற்பொழுது தங்கள் பங்கை மிகைபடுத்தி வருபவர்கள் யாரும் போராட்ட காலங்களில், எந்தவித முக்கிய பங்கு வகித்தவர்களோ, அல்லது போராட்டத்திற்காக உழைத்தவர்களோ, அல்லது போராட்டத்தின் பாதிப்பிற்கு உள்ளனார்வளோ அல்லா! இவர்களில் சிலர் முன்பு பார்வையாளர்களாகியும், போராட்டத்தின் நிழலில் குளிர்காய்ந்தவர்கள். சிலர் போராட்டத்தின் குறைகளைகளை நசுக்காக மற்றவர்களிற்கு கூறிவந்தவர்கள்.

தமிழீழ மக்கள், அரசியல் உரிமை பெற்று சமாதானமாக வாழ வேண்டும் என்பதை, உண்மையில் இவர்கள் விரும்பியவர்காள இருந்தால், இவர்கள் ‘வைக்கல் பட்டடை நாய்’ போல் திகழமாட்டார்கள். முன்பு எந்தவித பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத இவர்கள், நேர்மையான மனிதர்களாக இருந்தால், இவ்விடயத்தில் உரியவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களை இணைத்து செயற்பட்டிருப்பார்கள். ஆகையால் இவர்களை நம்பி தற்பொழுது சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ள தென் ஆபிரிக்கா, நோர்வே, சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் மட்டுமல்லாது, சிறிலங்கா அரசும் ஏமாற்றத்தை சந்திக்க போகிறார்கள் என்பது தான் உண்மை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*