தாய்மையை பெருமைப்படுத்த நடிகை கஸ்தூரி எடுத்த புது முயற்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தமிழில் பிரபு நடித்த ‘சின்னவர்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. ஏராளமான மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார். அதன்பிறகு அவர் திருமணம் செய்துகொண்டு சிறிதுகாலம் திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கிடையில் நடிகை கஸ்தூரிக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் தன்னை முழுமையாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்தப்படி நிர்வாணமாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிர்வாண புகைப்படம் பற்றி நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விளக்கமும் அளித்துள்ளார்.

அதில் குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். இந்த புகைப்படம் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit