மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜே.வி.பி. கண்டனம்.

பிறப்பு : - இறப்பு :

உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தைப் போன்றே புதிய அரசாங்கமும் மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும்,

நீதியையும், உரிமைகளையும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பா கேட்டறிந்து குரலை அதற்கொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை விடுத்து, உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தத் தாக்குதல்களுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்ககே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தவறியதாலேயே; தேசிய உயர் டிப்ளோமா பொறியியல கற்கைநெறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நேரிட்டது.

இந்த டிப்ளோமா கற்கைநெறிக்கான பெறுமதியை தக்கவைத்துக் கொள்ளுமாறும், தங்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறும் கோரியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கமோ, கல்விசார் உயரதிகாரிகளோ அக்கறை கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை விட அவர்கள் மீது தடியடி தாக்குதல்களையும், நீர்த் தாரைப் பிரயோகத்தையும் மேற்கொள்ளும் கடந்த அரசாங்கத்தின் அனுகுமுறைகளையே புதிய அரசாங்கமும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மாணவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் வன்மையாக கண்டிப்பதோடு, அவர்களது பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறும் மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit