மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு பிரதமர் பணிப்பு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ranil_41

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கரம சிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர்,

விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கும் பணித்துள்ளார்.

உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் கற்கைநெறி மாணவர்கள் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று பாரிய பேரணி ஒன்றை நடத்தியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்துடன் மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததை தொடர்ந்து போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதனால் மாணவர்களுக்கும், பொலிஸாரிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit