மக்கள் எதிர்பார்த்த சேவைகளைச் செய்யக் கூடிய காலம் கனிந்துள்ளது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திய மலையக மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சேவைகளைச் செய்யக் கூடிய காலம் கனிந்துள்ளது – தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அமைச்சர் திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் பொகவந்தலாவ கெர்கோஸ்வோல்ட் கீழ் பிரிவூ தோட்ட பயனாளிகளுக்கான கூரைத்தகடுகளை பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தோட்ட கமிட்டி தலைவர் நாயகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அம்பகமுவ இணைப்பாளர் கல்யாணகுமார்இ மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜா மாவட்ட தலைவி கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவதுஇ கடந்த காலங்களில் அரசியல்வாதிகளிடமிருந்து மலையக தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த சேவைகள் கிடைக்காத காரணத்தினால் கடந்த பொதுத்தேர்தலில் மலையக தமிழ் மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய வேட்பாளர்களை வெற்றிபெற செய்தனர்.

இதன் பயனாக மலையக தமிழ் மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சர் திகாம்பரத்துக்கு மலையக புதிய கிராமங்கள் உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டது. அதேவேளை மலையக தமிழ் சமுதாயம் ஏனைய சமூகத்தை விட கல்வியில் 30 வருட கால பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்திற் கொண்டு இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனுக்கு கல்வி இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட அதேவேளை இந்நாட்டில் வாழுகின்ற இனக்குழுக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அமைச்சர் மனோகணேசனுக்கு தேசிய கலந்துரையாடல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அமைச்சுக்களும் இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களை பொருத்த வரையில் முக்கியமான அமைச்சுக்களாகும். இது இந்நாட்டின் மலையக தமிழ் மக்களின் வரலாற்றில் பாரியதொரு அரசியல் திருப்புமுனையாகும். இந்த அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அடுத்தவருடம் முதல் இந்த அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள் மேலும் உத்வேகத்ததுடன் தொடரவூள்ளன. இதுவே நாங்கள் மலையகத்தில் ஏற்படுத்திய அரசியல் மாற்றமாகும்.

ஆகவே வாக்களித்த மக்கள் பொறுமையுடன் இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதில் முனைப்புக்காட்ட வேண்டும்.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை காரணமாக வைத்து சில காழ்ப்புணர்வுள்ள அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்த முற்படுகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் கூட்டுஒப்பந்தத்தின் மூலமாகவே பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இது யாவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் இந்த முறையும் கூட்டொப்பந்த தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்ததை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு எமது அமைச்சர்கள் கூட்டொப்பந்தத்திற்கு வெளியிலிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு தமது தொழிற்சங்க பலத்தைக் கொண்டு கூட்டொப்பந்த தொழிற்சங்கங்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்காவிடின் தோட்ட தொழிலாளர்கள் அத்தகைய தொழிற்சங்கங்களிலிருந்து விலகி தமிழ் முற்போக்கு கூட்டணின் தொழிற் சங்கங்களுக்கு அங்கத்துவ ரீதியான பலத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*