பெண்களின் வகிபாகத்தை சுட்டிக்காட்டும் பூகோள மகளிர் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கான அமெரிக்காவின் உறுதியான அர்ப்பணிப்பை விளக்கும் வகையில் இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பூகோள மகளிர் விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் கத்தரீன் ரஸ்ஸல் வியாழக் கிழமை (29) அமெரிக்கா திரும்பியுள்ளதாக அமரிக்க தூதுவராலயம் வியாழக் கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தொழில் முனைவோர், மற்றும் ஊடகவியலாளர்களை போன்றோரைச் சந்தித்து, நல்லிணக்கம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பல் மற்றும் பால்நிலைசார் வன்முறையை அடையாளப்படுத்துவதில் பெண்களின் முக்கியமான வகிபாகங்களை அவர் எடுத்துரைத்தார்.

பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்துவது அனைவரினதும் முக்கிய ஆர்வமாக உள்ளது என்று அமெரிக்கா நம்புகின்றது. என தூதுவர் ரஸ்ஸல் குறிப்பிட்டார். பெண்கள் சிறப்பாக இருக்கும் போது, சமுதாயங்கள், வர்த்தகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பாக இயங்கும். என அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்தத்தால் வாழ்க்கைத் துணையை இழந்த மற்றும் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்களுக்கான, தொழில் பயிற்சி மற்றும் சிறுதொழில் கடன்கள், நல்லிணக்க மற்றும் உளவளத்துணை நிகழ்ச்சிகள் என அமெரிக்காவின் தற்போதைய உதவிகளை தூதுவர் ரஸ்ஸல் சுட்டிக்காட்டினார்.

பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்கள் மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் இலங்கைப் பங்காளர்களையும் அவர் சந்தித்தார்.

மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த பெண்களை கைவிட்டு விடமுடியாது. என தூதுவர் ரஸ்ஸல் கூறினார். அமெரிக்காவும், இலங்கையும் இவர்களை மறந்துவிடவில்லை என்பதனை இந்தப் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்திராணி பண்டார, வடமாகணத்தின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ் பள்ளியக்கார அவர்களுடனான சந்திப்பின் போது தூதுவர் ரஸ்ஸலுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்களும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் முதல் காலி வரை, அனுராதரபும் முதல் மட்டக்களப்பு வரை, நாடு முழுவதிலும் பால்நிலை சமத்துவத்திற்காகவும், பெண்களை வலுவூட்டுவதற்காகவும் பரிந்து பேசலுக்கு உள்ளுர் சிவில் சமூகங்களுடனான எமது பங்காளித்துவம் குறித்து நாம் பெருமை கொள்கின்றோம் என தூதுவர் கேஷாப் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*