உள்ளூராட்சி சபைத்; தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிப்பது குறித்து இதுவரை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவில்லை.

இந்நிலையில், உள்ளுராட்சி சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வழிநடத்தி அந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்ய ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது நடுநிலைமை வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் நடுநிலைமை வகிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*