உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அவசியம் இல்லை

பிறப்பு : - இறப்பு :

உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவொரு அவசியமும் இல்லையென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்ற போதிலும்,

அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்திற்கு அமைய 70 வீதம் தொகுதி வாரி முறையிலும் 30 விகிதம் விகிதாரசார முறையிலும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit