இந்தோனேசியாவில் கைதான சோட்டா ராஜனுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்குமேலாக தலைமறைவாக இருந்து வந்த மும்பை நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா ராஜன் சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு இந்தியா உள்பட வெளிநாடுகளில் ஆயிரக்கணக்காக கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருக்கும் அதிர்ச்சி தகவலை மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சோட்டா ராஜனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் இருக்கின்றன. இதில் பெரும்பகுதி இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அவர் தனது சொத்துக்களை முதலீடு செய்து இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சீனா மற்றும் ஜகார்த்தாவில் சோட்டா ராஜனுக்கு சொந்தமாக ஓட்டல்களும், சிங்கப்பூரில் நகைக்கடைகளும் இருக்கின்றன. மேலும் ஜிம்பாப்வேயில் வைர வியாபாரத்திலும் சோட்டா ராஜன் தனது பணத்தை முதலீடு செய்து இருப்பதாகவும், இதனால் அந்நாட்டில் குடியேற திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக மும்பை போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit