பீட்சா மாவை காற்றில் சுழற்றி புதிய கின்னஸ் சாதனை (வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சாங்காய் நகரத்தில் உள்ள சாங்கிரி-லா சொகுசு நட்சத்திர ஓட்டலில் பீசா தயாரிக்கும் மாவை ‘டாஸ்’ செய்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பீசா மீது அலாதியான பிரியம் கொண்ட 511 பேர் ஒரே நேரத்தில் டாஸ் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இவர்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இருந்தனர். இதற்கு முன்பாக, லண்டனில் உள்ள பாபா ஜான்ஸ் ரெஸ்டாரண்டில் 338 பேர் ஒரே நேரத்தில் டாஸ் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

சாங்காயின் இதே நட்சத்திர ஓட்டலில் கடந்த 2013-ம் ஆண்டு ‘எர்த் அவர்’ நிகழ்வின் போது 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். சென்ற ஆண்டு 338 பேர் ஒரே நேரத்தில் படுக்கையில் காலை உணவு சாப்பிட்டு கின்னஸ் சாதனை புரிந்திருந்ததும் இதே ஓட்டலில்தான்.

 

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit