தஞ்சை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை: மேயர் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தஞ்சாவூர், அக். 29–

தஞ்சாவூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் சாவித்திரி கோபால் தலைமை தாங்கினார். ஆணையாளர் குமார், துணை மேயர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:–

சதாசிவம் (தி.மு.க.):– நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக பணம் கட்டியவர்களுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனே இணைப்பு கொடுக்க வேண்டும்.

செயற்பொறியாளர் சீனிவாசன்:– நகரின் விடுபட்ட பகுதிகளுக்கும், மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சதாசிவம்:– மாநகராட்சியில் புதிதாக வீடுகளுக்கு வரி விதிக்கப்படுகிறதா? சதுர அடிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது?

வருவாய் அதிகாரி:– புதிதாக வீடுகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

சண். ராமநாதன் (தி.மு.க.):– மழைக் காலமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா?

மாநகர் நல அதிகாரி டாக்டர் செந்தில் குமார்:– இந்த மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51–வது வார்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சரவணன்(அ.தி.மு.க.):– எனது வார்டில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சண். ராமநாதன்:– 51–வது வார்டல் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் போதாது. மாநகர் முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் சாவித்திரி கோபால்:– தஞ்சை மாநகரில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், இது வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

வைஜெயந்திமாலா:– மாரிக்குளம் இடு காட்டில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு கூரை வீட்டிற்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும்.

மாரிகுளம் இடு காட்டை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதற்கு மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சாமிநாதன் (அ.தி.மு.க.):– துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பில் பணி ஓய்வு பெற்றவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதால் வீடு ஒதுக்கீடு பெற்ற பணியாளர்கள் குடியேற முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:– உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாமிநாதன்:– தஞ்சை பெரிய கோவில் எதிரில் சாலையை கடப்பதற்கு மேம்பாலம் கட்ட வேண்டும்.

மேயர்:– தஞ்சை– திருவையாறு பழைய நெடுஞ்சாலையில் 9 பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தஞ்சை பெரிய கோவில் எதிரில் மேம்பாலம் கட்டும் பணியும் ஒன்றாகும்.

தங்கம்மாள். (அ.தி.மு.க.):–

எங்கள் வார்டில் சாக்கடை நீர் வீதிகளில் ஓடுகிறது அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:– 2 நாட்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சரவணன்:– புதிய பஸ் நிலையத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேயர்:– புதிய பஸ் நிலையத்தில் வளர்ச்சி பணிக்காக ரூ. 70 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் மழை நீரை அப்புறப்படுத்தவும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*