சோட்டா ராஜனை அழைத்து வர மும்பை போலீஸ் இந்தோனேஷியா செல்கிறது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடத்தல் கும்பல் தலைவன் சோட்டா ராஜனை அழைத்து வர மும்பை போலீஸ் இந்தோனேஷியா செல்கிறது.

நிழல் உலக தாதாவாக வலம் வரும் பிரபல கடத்தல் கும்பல் தலைவன் தாவூத் இப்ராகிமின் வலது கரமாக திகழ்ந்து வந்த சோட்டா ராஜன், கடந்த 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து அவரை விட்டு பிரிந்து சென்றார்.

இதனால் தாவூத்தின் எதிர்ப்பை சம்பாதித்த அவர், தொடர்ந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்து வந்தார். மேலும் தாவூத்தின் கொலை சதியில் இருந்தும் ஓரிரு முறை தப்பினார்.

இந்தியா மற்றும் சர்வதேச போலீசாருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணி காட்டி வந்த அவர், கடந்த 25-ந்தேதி இந்தோனேஷியாவின் பாலித்தீவில் சிக்கினார். ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த போது, இந்தோனேஷிய அதிகாரிகள் அவரை மடக்கினர்.

55 வயதான சோட்டா ராஜன் மீது, தடா, பொடா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 75-க்கும் அதிகமான வழக்குகள் இந்தியாவில் உள்ளன. எனவே அவரது கைது நடவடிக்கை, இந்திய பாதுகாப்புத்துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் நிழல் உலக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு சதிகாரனுமாகிய தாவூத் இப்ராகிமை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்திய அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே சோட்டா ராஜனை மும்பை கொண்டு வரும் முயற்சியை இந்திய பாதுகாப்புத்துறையினர் தொடங்கி உள்ளனர்.

இதற்காக இந்திய பாதுகாப்புத்துறையின் சிறப்புக்குழு ஒன்று இந்தோனேஷியா செல்லும் என கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைதானதை தொடர்ந்து, மும்பையில் அவர் தொடர்புடைய வழக்குகளை தொகுத்து அனுப்புமாறு மும்பை போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சோட்டா ராஜன் தொடர்புடைய வழக்குகளை தொகுக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரை இந்தோனேஷியாவில் இருந்து டெல்லி அழைத்து வருவதற்கான போலீஸ் பிரிவில், மும்பையை சேர்ந்த குற்றப்பிரிவு போலீசாரும் இடம்பெற்று இருப்பதாகவும், அவர்களுடன் மும்பை போலீசாரும் அங்கு செல்வதாக குற்றப்பிரிவு துணை கமிஷனர் தனஞ்செய் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*