நாடு முழுவதும் பருப்பு பறிமுதல் 1.2 லட்சம் டன்னாக உயர்வு

பிறப்பு : - இறப்பு :

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கலில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 9 ஆயிரத்து 304 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதலான நிலையில், இன்று மட்டும் 22 ஆயிரம் டன் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை காரணமாக, கடந்த 10 நாட்களில் துவரம் பருப்பு விலை சென்னையில் குவின்டாலுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 15 ஆயிரம் ரூபாயாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சில்லறை விற்பனையிலும் துவரம் பருப்பு விலை 20 முதல் 35 ரூபாய் வரை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit