அப்துல் கலாம் பயன்படுத்திய பொருட்கள் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டது

பிறப்பு : - இறப்பு :

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 ‌பெட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வ‌ரப்பட்டன.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு டெல்லி ராஜாஜி மார்க் சாலையில் உள்ள 10ஆம் எண் வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் அப்துல் கலாம் காலமானதைத் தொடர்ந்து அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், அவரது இறுதி உரையின் நகல் உள்ளிட்டவற்றை கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இதைத் தொடர்ந்து அப்பொருட்கள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரத்துக்குக் கொண்டு வரப்பட்டன. டெல்லியில் அவர் வசித்த இடத்தை நினைவிடமாக அறிவிக்காவிட்டாலும், வேறு எங்காவது மத்திய அரசு நினைவகம் அமைக்க வேண்டும் என அப்துல் கலாமின் பேரன் சலீம் கோரிக்‌கை விடுத்துள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit