அப்துல் கலாம் வசித்த பங்களாவை மத்திய மந்திரிக்கு ஒதுக்கியதில் தவறு இல்லை: வெங்கையா நாயுடு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வசித்த பங்களா, மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுபற்றி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறியதாவது:-

கேபினட் மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளுக்கு டைப் 8 ரக பங்களாவை அவற்றின் இருப்புக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யலாம் என்று கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படியே, அப்போதைய இணை மந்திரிகளான சச்சின் பைலட், சிரஞ்சீவி, ராஜீவ் சுக்லா, இ.அகமது, முனியப்பா உள்ளிட்டோருக்கு டைப் 8 ரக பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன.

எனவே, இப்போதும் அதே அரசு விதிமுறைகள் மற்றும் நடைமுறைப்படிதான், மத்திய மந்திரி மகேஷ் சர்மாவுக்கு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை. மத்திய மந்திரிகளில் மகேஷ் சர்மாவுக்கு மட்டுமே இதுவரை அரசு வீடு ஒதுக்காமல் இருந்ததாலும், அப்துல் கலாமின் ஊழியர்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டதாலும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*