முசலியில் மீள்குடியேற்றம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டு 25 ம் ஆண்டு நிறைவு தின நிகழ்வில் குவைட் நாட்டு அரச அனுசரணையுடன் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் குமாசா வீடமைப்புத் திட்ட மாதிரிக் கிராமம் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை (30.10.2015) நடைபெறுகிறது.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தன்னார்வத் தொண்டுப் பணிகளின் தொடர் வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல், அல்குர்ஆன் மத்ரஸா, 20 வீடுகள், நீர் விநியோகம் உள்ளடங்கிய வீடமைப்பு திட்ட மாதரிக் கிராமம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) பொதுச் செயலாளர் ஏ.எல். கலிலூர் ரஹ்மான், நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி அம்ஜத் ராசிக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஏ.எல். பிர்முஹம்மது குத்பாபோரையையும் அஷ்ஷெய்க் என்.எம்.சீ. அன்சார் ரியாதி வரவேற்புரையையும் மற்றும் நன்றியுரையை கலாபூசணம் அஷ்ஷெய்க் செய்னுதீன் எஸ்.பரீத் உரை நிகழ்த்தவுள்ளனர்.

மன்னார் பட்டினம், நானாட்டான், முசலி, மாந்தை, மடு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளைக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் (85 வீத முஸ்லிம்கள் வாழ்கின்ற) முசலி, மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றது.

வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி முசலி, மாந்தை, அநுராதபுரம் ஆகிய மூன்று பிரதேசங்களையும் இணைக்கும் முக்கோணப் பிரதேசத்தில்தான் இலங்கை யின் தொன்மையான ஆதி நாகரிகம் காணப்பட்டிருக்கின்றது.

விஜயனின் இலங்கை வருகையும் முசலிப் பிரதேசத் தோடு இணைந்து நோக்கப்படுகின்றது என்ற வகையில் இப்பிரதேசம் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

முத்துகுளிப்பு, முத்துவியாபாரம் என்பன உலகிலேயே 2000-3000 ஆண்டுகள் மிகப் பழமைவாய்ந்த தொழில்களாகும். இது முசலியில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

அதனாலேயே முசலிப் பிரதேசத்தின் மூதாதையர்கள் முத்துக் குளித்தலோடு தொடர்பு பட்டிருந்த அரேபிய வழித் தோன்றல்களும் கீழ்க் கரையில் வாழ்ந்திருந்த இந்திய வழித் தோன்றல்களும் என அறிய முடிகிறது.

கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் நிர்மாணிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இரு பெரு நீர்ப்பாசனத் திட்டங்களான அகத்திமுறிப்பு, வியாயடி ஆகியன இப்பிரதேசத்தின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்புவதுடன் அக்கால ஆட்சியாளர்களது அபிவிருத்திச் செயற்பாடுகளையும் பறைசாற்றி நிற்கி ன்றன.

இவ்வாறானதொரு மிகப் பழைமை யான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இப்பிரதேச மக்கள் இங்குள்ள 22 கிராமங்களில் தனி முஸ்லிம்களாக இருக்கின்றமையால் சுமார் 85 வீத முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பிரதேச செயலகப் பிரிவாகக் காணப்படுகிறது. “முசலிப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களில் முஸ்லிம்களே மிகப் பெரும்பான்மை யினர்” என்று 1834 ம் ஆண்டு காசிச் செட்டி என்பவர் குறிப்பிடுகிறார்.

அத்தோடு சிலாவத்துறையை அண்டி இருக்கும் கடற்கரையில் இடிபாடுகளுக் குள்ளாகி காட்சி தரும் அல்லி இராணிக் கோட்டை பல்கீஸ் இராணியின் கோட்டைதான் என்றொரு கதையும் உண்டு.

முசலிப் பிரதேச (முஸ்லிம்) மக்களின் ஆரம்பகாலக் குடியேற்றங்களின் காலப் பகுதியை திட்டமாக வரையறுத்துக் குறிப்பிட முடியுமான தடயங்கள் இல்லாவிட்டாலும்கூட பழங்காலத் திலேயே இங்கு முஸ்லிம்கள் குடியேறி வாழ ஆரம்பித்துள்ளனர் என்பதை சில குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறானதொரு தொன்மையான வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட முசலியின் ஒரு அங்கமே அகத்திமுறிப்பு கிராமமாகும்.

இவ்வளவு ஆழ அகலமாக பல்லாண்டு காலம் வேர் விட்டிருந்த ஒரு சமூகம்தான் குறிப்பிட்ட ஒரு சில மணித்தியால இடை வெளிக்குள் கால அவசாகம் இன்றி முற்று முழுதாக முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள்.

வடபுலத்து முழு முஸ்லிம்களும் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் 1990 ம் ஆண்டு ஒக்டோபர் இறுதிப் பகுதியில் (இதே காலப் பிரிவில் வெளியேற்றப்பட்ட போது அதிலிருந்து விதிவிலக்குப் பெறாத தொன்மையான கிராமமான அகத்திமுறிப்புக் கிராமத்திலும், எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்ற முதுமொழிக்கமைய தனித்தனி இல்லங்களைக் கொண்டிருந்த சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்ததாக பதிவுகள் கூறுகின்றன.

வரலாற்றின் முதன் முறையாக சற்றுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு இப்படியானதொரு இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டது இது எம்மினத்தால் (கறுப்பு ஜூலை போல) கறுப்பு ஒக்டோபராக வரலாற்றில் பதியப்பட்டு இன்று வரை இருபத்தி ஐந்து கறுப்பு ஒக்டோபரை சந்தித்திருக்கி றோம். அதனை நினைக்கும்போதெல்லாம் இன்னும் ஏதோ ஒரு பக்கத்தில் வலிக்கத்தான் செய்கிறது.

இவ் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பாடசாலைகள், பள்ளிவாசல்கள், மதஸ்தாபனங்கள், பொதுக் கட்டடங்கள், குடியிருப்புகள் என்ற பாகுபாடின்றி அனைத்துமே முற்றாக அழிக்கப்பட்டு கிராமங்கள் சுடுகாடாயின.

முற்று முழுதாக நூறு வீதமே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முசலிப் பிரதேசம் படிப்படியாக விடு பட ஆரம்பித்தபோது 2003 ம் ஆண்டு அவர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஆங்காங்கே சிலர் குடியேறத் துவங்கினர்.

2009 முற்று முழுதாக அவர்கள் பூண் டோடு அழிக்கப்பட்ட பின் படிப்படியாக குடியேறி தற்போது சுமார் 220 குடும் பங்கள் வரை வசித்து வருகின்ற அதே வேளை இன்னும் எஞ்சியுள்ள 450 குடும்பங்கள் குடியேற காத்திருக்கின்றன.

இந்நிலையில் மீள்குடியேறும் மக்களுக்கு ஆங்காங்கே சிற்சில உதவிகள் கிடைத்தாலும் திருப்திகரமாக சொல்லக் கூடிய நிலையில் உதவிகள் கிடைக்க வில்லை என்பது பொதுவான கருத்தாகும். குடியேறிய அனைவருமே எமது கிரா மத்தில் குடிசைகளில்தான் வாழ்கிறார்கள்.

யூ.என். ஹெபிடாட் நிறுவனத்தால் 63 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தாலும் இது மிகவுமே குறைந்த ஒரு தொகையாகும்.

இஸ்லாமிய நிறுவனங்களின் உதவிகளும் ஓரளவு இருக்கும் நிலையில் பறகஹதெனிய அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா, நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள், பள்ளிவாசல்கள், கிணறுகள் என பல்வேறு பணிகளைப் புரிந்து முசலிப் பிரதேச மக்களின் மீள் குடியேற்றத்தில் அதி கூடிய பங்களிப்புச் செய்து வருகிறது.

இதன் தொடரில் அங்கு பணி புரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வரின் வேண்டுகோளுக்கிணங்க அகத்திமுறிப்புக் கிராமத்திலும் சுமார் 20 வீடுகள், ஒரு பள்ளிவாசல், ஒரு பாலர் பாடசாலையுடன் கூடிய மத்ரஸா, கிணறு, தண்ணீர் டாங்கி என பாரியள விலான செலவில் மாதிரி கிராமத்தை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

வெளியேற்றப்பட்டு சரியாக 25 ஆண்டுகளின் பின் நடைபெறும் இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக (1990-10-28, 2015-10-30) கருதப்படலாம்.

இதுபோன்ற பணிகளை மேலும் முன்னெடுத்து அகதி மக்களின் வாழ்வில் புத்தொரு இரத்தப் பாய்ச்சும் அகில இலங்கை ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர், பிரதித் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட அனைத்து நிருவாகிகளுக்கும் அகதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இதில் வெளியேற்றப்பட்ட பிற்பாடு பாதிப்புக்குள்ளான பள்ளியின் படமும் ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதிய் யாவினால் தற்காலிக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் படமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் திட்ட மாதிரிக் கிராமத்தின் தோற்றத்தையும் படங்களில் காணலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*