பிரதமர் ரணில் நவ.5இல் கொள்கை விளக்க உரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரசாங்கத்தின் இடைக் கால பொருளாதாரக் கொள்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

8ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின் போது இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பிரதமரின் கொள்கை பிரகடனம் இடம்பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இது குறித்து அறிவித்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. ஐ.ம.சு.மு, ஜே.வி.பி. மற்றும் பிரதான கட்சிகள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞா பனங்களில் உள்ள சாதகமான விடயங்களினடிப் படையில் புதிய அரசாங்கத்தின் கொள்கை அமையும் என ஜனா திபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*