ஜெனீவா அறிக்கை – அரசியல் இலாபம் கருதாது நாட்டு நலனுக்காக ஒன்றுபட வேண்டும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சர்வதேச விசாரணை என்ற நிலையிலி ருந்த பிரச்சினை தற்போது தேசிய ரீதி யாக்கப்பட்டுள்ளது. அரசியல் கண்ணோட் டத்தோடு நோக்காமல் நாடு என்ற ரீதி யில் சிந்தித்து ஜெனீவா அறிக்கை கையாளப்பட வேண்டியது முக்கியமாகும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாட்டின் ஒருமைப்பாடு, ஜனநாயகத்தை பாதுகாத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள் ளக்கூடிய செயற்பாடுகளே முக்கியமாகிறது என குறிப்பிட்ட அமைச்சர், எவரையும் காட்டிக் கொடுத்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியா ளர் மாநாடு நேற்று கட்சித் தலைமைய கத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த அமரவீரவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து விளக்கமளித்த அமைச்சர், ஜெனீவா அறிக்கையை விட மெக்ஸ்வல் பரணகம அறிக்கை கடுமையாகவுள்ளது. சர்வதேச நிபுணர்கள் ஆலோசனைகள் பெறுவது தொடர்பிலும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

தற்போதைய ஜெனீவா மனித உரிமைப் பேரவை அறிக்கை இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்க ளுக்கு அமையவே விசார ணைகளை முன்னெடுக்க வழிவகுத்துள்ளது. இதனால் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு எம்மால் சுயாதீனமாக அந்த விவகா ரங்களைக் கையாள முடியும்.

இன்று இல்லாவிடில் இன்னும் நான்கோ அல்லது ஐந்தோ வருடங்களிலோ இப்பிரச்சினை க்கு நாம் தீர்வு காணவே வேண்டும் அதனால் இப்போதுள்ள இந்த சந்தர்ப் பத்தை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது முக்கியமாகும்.

இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அந்த நாடுகள் புத்தி சாதுர்யமாக செயற் பட்டு அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொண்டுள்ளன என்பதை நாம் உணர வேண்டும்.

நாட்டின் நல்லிணக்கம், ஒருமைப்பாட் டைப் பாதுகாத்துக் கொண்டு தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கையை முன் னெடுக்க வேண்டியது அவசி யமாகிறது.

நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை, கட்புல ஒருமைப் பாடு என்பவற்றில் கவனம் செலுத்துவதோடு குறிப்பாக கிராமிய மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு ஏற்படுத் தப்பட வேண்டியுள்ளது.

எவரையும் காட்டிக் கொடு த்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது. ஐ.நா. நிறுவனத்துக்கு முன்னால் அமர்ந்து உண்ணாவிரதம் செய்தோ கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டங் கள் செய்வதோ பிரயோசனைமில்லை. இதனை புத்தியாக செயற்பட்டு தீர்க்க வேண்டியுள்ளது.

நாம் எமக்குக் கிடைத்த ஆலோசனைகள் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமையே இந்த பிரச்சினை உக்கிரமடையக் காரணம்.

இப்போதாவது இது விடயத்தில் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும் சர்வதேச மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினையை உள்ளக ரீதியில் தீர்க்க முடியும் என்ற நிலை தற்போது உருவாக் கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*