தேயிலை உற்பத்தித்துறையை மீட்டெடுக்க பிரதமருடன் பேச்சு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கைத் தேயிலை உற்பத்தித்துறை வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதையும் இந்நெருக்கடி நிலையால் இத்துறை நஷ்டமடைந்து வருகிறது என்பதையும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உண ராமல் இல்லை. தொழிலாளர்கள் ஆயி ரம் ரூபா கோரிக்கையை முன்வைக்கவும் இல்லை. எனவே, உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் என்ற எமது சம்பளத்திட்டத் துக்கு சங்கங்கள் இணங்கி வரும் என்றே நாம் கருதுகிறோம்.

தேயிலை உற்பத்தித்துறை சார்ந்த நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந் தித்து இத்துறையின் இன்றைய நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது தொடர்பாக பெருந்தோட்ட துரைமார் சங்கத் தலைவர் ரொஷான் ராஜதுரையிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு தினகர னுக்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இத்துறையை பாதித்திருக்கும் அம்சங்கள் குறித்தும் வீழ்ச்சியில் இருந்து எவ்வாறு தேயிலை உற்பத்தித் துறையை மீட்டெடுக்கலாம் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

தாங்கள் முன்வைத்த பிரச்சினைகளையும் தீர்வுக்கான நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் கனிவுடன் கேட்டுக் கொண்டதாகவும் மாற்று நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என உறுதிமொழி வழங்கியதாகவும் ரொஷான் ராஜதுரை மேலும் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடு களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் தேயிலை இறக்குமதியில் அந்நாடுகளில் காணப்படும் சாதகமற்ற நிலைமைகளையும் பிரதமரிடம் சுட்டிக் காட்டினோம்.

இலங்கை தேயிலை இறக்குமதி தொடர்பாக அந்நாடுகளில் காணப்படும் விதிமுறைகளை தளர்த்தி வரிச்சலுகைகள் வழங்குவது தொடர்பாக உயர் மட்ட அமைச்சர்கள் குழுவொன்றை இந்நாடுகளுக்கு அனுப்பி வைக்க பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

அமெரிக்கா எகி ப்து ஐரோப்பிய நாடுகள் போன்ற புதிய சந்தை வாய்ப்புக்களைக் கண்டறியும் வகையில் அமைச்சர் மட்ட தூதுக்குழுக் களை அனுப்புவது தொடர்பாகவும் பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கை தேயிலை உற்பத்தித்துறை கடந்த ஒன்பது மாதங்களில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டமடைந்தி ருக்கிறது.

எனவே பெருந்தோட்டக் கம் பனிகளுக்கு மட்டுமன்றி சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் இந்த நஷ்டத்தை ஈடு செய்து மீளவும் முதலீடு செய்யும் பொருட்டு ஒரு மாதத்துக்கான முதலீட்டை கடனாகத் தரும்படி பிரதமரிடம் வேண்டு கோள் முன்வைக்கப்பட்டது. எமது நிலைப்பாட்டை அரசு உணர்ந்திருப்ப தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தேயிலை ஏல விற்பனையின் போது அரசாங்கமும் தேயிலை கொள்வனவில் ஈடுபடவுள்ளது. இது இத்துறைக்கு உதவு வதாக அமையும். இவ்வாறு ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை தேயிலைச் சபை கம்பனி பிரதி நிதிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*