தமிழ் அரசியல் கைதிகளை 7ஆம் திகதிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும்

பிறப்பு : - இறப்பு :

அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அச்சநிலையை தளர்த்தும் வகையில் நல்லாட்சிக்கான அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வித்தியாலய அதிபர் செபஸ்டியன் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கல்குடா வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரி.ரவி, ஏறாவூர்ப்பற்று கோட்ட கல்வி அதிகாரி பொ.சிவகுரு, ஓய்வுபெற்ற அதிபர் வ.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதிய அரசாங்கம் இந்த நாட்டிலே சிறுபாண்மை மக்களுக்கு பிரச்சினை உள்ளது அதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும். இராணுவத்தினரால் சுவிகரிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிகள் பாடசாலைகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

மேலும்,வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றப்படாதுள்ள பகுதிகளில் உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் போது எமது மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் மீதுள்ள சந்தேகம் நீங்கும் வாய்ப்பு உருவாகும் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit