யாழ் ஆயர் ஜஸ்ரின் பேனாட்டை சந்தித்தார் அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர –

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போரினால் பல்வேறு துறைகளில் முன்னேற முடியாமல் வடமாகாண மாணவர்கள் இருந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக விசேடவசதிகளை வடமாகாணத்தில் ஏற்படுத்தி மாணவர்களை தமது விருப்பத்திற்கிணங்க துறைகளை தெரிவு செய்து ஆற்றலை வெளிப்படுத்த இடமளித்தது பாராட்டத்தக்க விடயம் என யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர யாழ். ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை அவரின் இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் எதுவும் தேவைப்படுகின்றதா? என்று ஆயரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஆயர் தெரிவிக்கையில்,

விளையாட்டுத்துறை மூலமே இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.பாடசாலைகளில் மாணவர்களுக்கு சகல சந்தர்ப்பங்களும் குறிப்பாக விளையாட்டுத் துறையில் வழங்கப்பட வேண்டும் என யாழ்.ஆயர் தெரிவித்தார்.

இதேவேளை ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆயராக நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவது அரச தலைவருடனான சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*