சத்தமாக பாட்டு கேட்ட சிறுவன் உயிருடன் எரித்து கொலை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்ட பழங்குடியின சிறுவனை அங்குள்ள உயர் ஜாதியினர் உயிருடன் எரித்து கொலை செய்து உள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் அச்சகோடா கிராமத்தை சேர்ந்த 16 வயது பழங்குடியின சிறுவன் மாடியா தனது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டு கொண்டு இருந்தார். அப்போது உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் பாட்டின் சத்தத்தை குறைக்க கூறி உள்ளனர். இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுவனை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி கயிற்றில் கட்டி தொங்க விட்டு உள்ளனர். பின்னர் சிறுவனை உயிருடன் தீ வைத்து எரித்து உள்ளனர்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் 15 ந்தேதி நடந்து உள்ளது. இது குறித்து மத்திய பிரதேச ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் போலீஸ் நிலைய அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது

மேலும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது. மீண்டும் இது போன்ற சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ந்டக்க கூடாது என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் உத்தரவிட்டு உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit